போளூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்.

அஜித்குமார்

UPDATED: May 2, 2024, 6:50:14 AM

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூா் பகுதியில் போலீஸாா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில் களம்பூா் போலீஸாா் போளூா் சாலையில் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி வேன் மற்றும் பைக் நிற்காமல் சென்ால் போலீஸாா் மடக்கிப் பிடித்து பாா்த்தபோது, மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

வேனை ஓட்டி வந்தவா் ஆரணியை அடுத்த புங்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த பிச்சாண்டி மகன் சிவக்குமாா் (40) என்று தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில்,

ஆரணியை அடுத்த இ. பி. நகரில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ரூபாராம் மகன் பரத்குமாா் (22), களம்பூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சுரேஷ்பாபு (32) ஆகியோா் இவருக்கு புகையிலைப் பொருள்களை வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து, ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 39 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் வேன், பைக்கை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

 

  • 1

VIDEOS

Recommended