• முகப்பு
  • குற்றம்
  • ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கிராமத்தில் உடல் ஊனமுற்றோர் நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா

ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கிராமத்தில் உடல் ஊனமுற்றோர் நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா

சண்முகம்

UPDATED: May 4, 2024, 10:24:53 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பாளையங்கோட்டை மேல் பாதி கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி தேவர்மகன் பாஸ்கரன் இவர் கொண்ட சமுத்திரம் எல்லைக்கு உட்பட்ட சர்வே எண் 95/2A பட்டா எண் 435 என்ற எல்லையில் சுமார் ஒரு ஏக்கர் 45 சென்ட் விலை நிலம் இருந்த நிலையில்

அருகாமையில் உள்ள கந்தசாமி மகன் ரவிகாந்த் 2008இல் போலி ஆவணம் தயாரித்து சுமார் 10 சென்ட் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு பாஸ்கர் என்னிடம் அடிக்கடி தகராறு செய்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு காட்டுமன்னார்கோயில் நீதிமன்றத்திற்கு தொடர்ந்தது வழக்கை விசாரித்த நீதிபதி இது போலி ஆவணம் எனவும் பாஸ்கரனுக்கு சொந்தமான நிலம் என்பதையும் மனுவை பாஸ்கரனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது

இந்நிலையில் மீண்டும் ரவிகாந்த் சிதம்பரம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் சிதம்பரம் நீதிமன்றத்திலும் ரவிகாந்த் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

இந்நிலையில் ரவி காந்தியின் மகன் உதயகுமார் பெயருக்கு தானே செட்டில்மெண்ட் செய்து மீண்டும் பாஸ்கரன் மீது போலீசில் புகார் செய்து வருகிறார்

இந்நிலையில் பாஸ்கரன் மகன் ஊனமுற்றோர் என்பதால் பல இடையூறுகளை செய்து வரும் ரவிகாந்த் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடி விசாரணை செய்து இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதோடு ரவிகாந்த் கட்சி பிரமுகர்களை வைத்து உயிருக்கு மிரட்டல் விடுத்து வருவதும் தொடர் கரையாக உள்ள நிலையில்

இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாஸ்கரன் மற்றும் அவரது மகன் பாலாஜி கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended