• முகப்பு
  • இலங்கை
  • தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

வவுனியா

UPDATED: May 14, 2024, 12:52:58 AM

கடந்த பங்குனி மாதம் 16ம் திகதி இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை கூட்டம் சட்டரீதியற்றது என தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்தியகுழு உறுப்பினர்களான சுதாகரன் மற்றும் சூ.சூரியபிரபாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கானது வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது குறித்த வழக்கின் எதிராளிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில் குறித்த வழக்கமானது ஜீன் மாதம் 19ம் திகதிக்கு திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

கடந்த பங்குனி மாதம் 16ம் திகதி ஈரப்பெரியகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபை கூட்டம் இடம்பெற்றிருந்தது.


குறித்த பொதுச் சபை கூட்டதிலே பல தீர்மானங்களும் சில பதவி நியமனங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் அவ்வாறு இடம்பெற்ற கூட்டமானது கட்சியின் யாப்பு விதிகளை மீறியதாக காணப்பட்டதாலும் தேர்தல் ஆணைக் குழுவின் விதிகளுக்கு எதிராக காணப்பட்டதாலும் குறித்த பொதுச்சபை கூட்டமானது ஒரு சட்ட ரீதியான கூட்டமில்லை என்பதுடன், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்கள், நியமனங்கள் சட்ட ரீதியற்றது என்ற ரீதியில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கட்சியின் தலைவர், செயலாளர் உட்பட ஏனையவர்களுக்கு அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது. 


இன்றைய தினம் குறித்த வழக்கானது எடுக்கப்பட்டிருந்த போது கட்சி அலுவலகமானது தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாகவும் அதனால் அழைப்பானையை சேர்ப்பிக்க முடியவில்லை என தெரிவித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கட்சியின் பதிவு செய்யப்பட்ட முகவரியாக குறித்த அலுவலகமே காணப்படுவதுடன், கட்சி காரியாலயமும் குறித்த முகவரியிலேயே அமைந்திருப்பதாகவும் எங்களுக்கு தெரிய வருகின்றது. இதனால் பிறிதொரு சேவை மூலமாக அழைப்பானையினை அவர்களிற்கு அனுப்புவதற்கு நீதிமன்றத்தை கோரியிருந்தோம்.இதன்காரணமாக எதிர்வரும் ஜுன் மாதம் 19ம் திகதிக்கு வழக்கு திகதி இடப்பட்டுள்ளதுடன், அன்றையதினம் எதிராளிகள் நீதிமன்றத்தில் தோன்றுவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தனர்.

இவ் வழக்கில் சட்டத்தரணிகளாக சட்டத்தரணி இரவீந்திரநாதன் கீர்தனனின் அறிவுறுத்தலுக்கு அமைய சிரேஷ்ட சட்டத்தரணிகளான கனகசபை ரவீந்திரன் மற்றும் துசித் யோன்தாசன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

 

VIDEOS

Recommended