பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் சஜித் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Aug 12, 2024, 6:07:49 AM
பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் நோக்கில் பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் எம்.உதயகுமார உள்ளிட்ட தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையொப்பமிட்டனர்.
1700 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுத் தருவதாக அரசு கூறிவந்த போதும் இதுவரைக்கும் அவை வழங்கப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்து வந்த ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.