• முகப்பு
  • இலங்கை
  • இலங்கையில் பல துறைகளில் சேவையாற்றி வரும் சமுக சிந்தனையாளர்கள் ஊக்குவிப்பு

இலங்கையில் பல துறைகளில் சேவையாற்றி வரும் சமுக சிந்தனையாளர்கள் ஊக்குவிப்பு

எம்.நசார்

UPDATED: May 21, 2024, 6:28:43 PM

கடந்த பதினொருவருடங்களாக இந்தியாவில் இயங்கி வரும் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சர்வதேச ரீதியாக தங்களது சேவையினை விஸ்தரித்து வருகின்றது.

original/img-20240521-wa0170
முதன் முறையாக இலங்கையில் பல துறைகளில் சேவையாற்றி வரும் சமுக சிந்தனையாளர்களை அத்துறைகளில் ஊக்குவிப்பதுடன் அவர்களது சேவை பாராட்டினையும் நடத்தியது.

அதன் தலைவர் Adv, டாக்டர் டி. கே. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  கொழும்பு,13 ஆமர் வீதி பிரைட்டன் ஹோட்டலில் சேவை ரத்னா விருதை எழுபது பேருக்கு வழங்கி வைத்தார்.

original/img-20240521-wa0168
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசரும் முன்னாள் வட மாகாண முதலமைச்சரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான C.V. விக்னேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார், இந்திய உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களும். சட்டதரணிகள் மற்றும் இந்தியா,இலங்கை சேர்ந்த முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இலங்கையை சேர்ந்த கலைமாமணி பொன். பத்மநாதன், சுபாஷினி பிரணவன் ஆகியோரின் நெறியாள்கையில்  மேற்படி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்த நிகழ்வில் சமூக சேவையாளரும் மாத்தளை சிந்தாகட்டி ஆலய தலைவருமான.வேலு பாலசுப்பிரமணியம்,சட்டத்தரணி பா.ஸ்ரீ வித்தியா,பலமண்டல தலைவர்.H. L. சந்தன விஜேமான.பாடகர் திமித்திரா ரத்நாயக்கா.நடிகர்.L. சிந்திக்க பத்திரன.கலாநிதி,வரலாற்று ஆய்வாளர் என்.கே, எஸ் .திருச்செல்வம்,கொழும்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கிறிட்டி வீ மேரி.ப. யோகேஸ்வரி (சட்டதரணி) விவேகானந்த கல்லூரி அதிபர்.மூ.மூவேந்தன்.சோதிடர்.எஸ்.யுவராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended