• முகப்பு
  • அரசியல்
  • உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து ராஜபாளையத்தில் பட்டாசு வெடித்தும்,  இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து ராஜபாளையத்தில் பட்டாசு வெடித்தும்,  இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்

அந்தோணி ராஜ்

UPDATED: Sep 29, 2024, 1:01:43 PM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்போது பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் அவ்வழியே சென்ற பாதசாரிகளுக்கும் பொது மக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் ராஜபாளையம் திமுக நகரச் செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, திமுக நிர்வாகிகள், நகராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதை வரவேற்று கொண்டாடினர்.

 

VIDEOS

Recommended