• முகப்பு
  • அரசியல்
  • பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கம்பம் முதல் தேவாரம் வரை வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கம்பம் முதல் தேவாரம் வரை வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ராஜா

UPDATED: Jun 18, 2024, 12:03:41 PM

நடந்து முடிந்த 18 வது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் திமுக விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ் வலது இடது கம்யூனிஸ்ட் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இந்திய முஸ்லிம் லீக் ஆகிய இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட்ட தங்க தமிழ் செல்வன் அவர்கள் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து நேற்று முதல் கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய பகுதிகளில் வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தியா கூட்டணி ஆதரவாளர்களுடன் கம்பம் முதல் தேவாரம் வரை சென்று வாக்களித்த பெருமக்களுக்கும் தோழமைக் கட்சி உறுப்பினர்களுக்கும் வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் அவர்கள் அப்போது அவர் பேசியதாவது இந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது இதற்கு திமுகவின் மூன்று ஆண்டுகள் செய்த சாதனையே இந்த வெற்றி வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது என கூறினார்.

மேலும் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இருநூற்று முப்பத்தி நான்கு தொகுதிகளிலும் கைப்பற்றி திமுக கூட்டணியில் ஆன அணி வெற்றி பெற்று தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராவார் என தெரிவித்தார். தேனி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் மக்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்வு காண மக்களின் குரலாய் ஒலிப்பேன் என கூறினார்.

 

VIDEOS

Recommended