அரசு நூலகத்திற்கு நேரில் சென்று அதன் வளர்ச்சிக்கு 10 ஆயிரம் நன்கொடை வழங்கிய மதுரவாயல் எம்எல்ஏ.
ஆனந்த்
UPDATED: Nov 22, 2024, 6:10:11 PM
சென்னை மாநகராட்சி
148 வது வார்டு நெற்குன்றம், மேட்டுக்குப்பம் பெருமாள் கோயில் தெரு பகுதியில் அரசு பொது நூலகம் இயங்கி வருகிறது.
இந்த நூலகம் நிதி பற்றாக்குறை காரணமாக சில புத்தகங்கள், மேசைகள் உள்ளிட்ட மழை கால பாதுகாப்பு உபகரணங்களா வாங்க முடியாமல் தவித்த நிலையில் அது குறித்து கேள்விப்பட்ட மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி நேரில் சென்று நூலகத்தை ஆய்வு செய்ததோடு நூலக வளர்ச்சிக்கு ரூபாய் 10 ஆயிரத்தை நூலக பராமரிப்பாளரிடம் வழங்கினார் அதற்கு உண்டான நன்கொடை ரசீதயும் பெற்று கெண்டார்.
மேலும் இந்தப் பகுதியில் அரசு பள்ளிகள் செயல்படுவதோடு ஆயிரக்கணக்கான பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் வசித்து வரக்கூடிய சூழ்நிலையில் அவர்களின் அதிகம் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட நூலகம் வளர்ச்சி பெற எம்.எல்.ஏ உதவியதற்கு தங்கள் நன்றிகளை நூலகம் சார்பாக தெரிவித்து கொண்டனர் .
நூலக வளர்ச்சிக்கு தன் சொந்த பணத்தை கொடுத்து உதவிய சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பொதுமக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் போது வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் நௌம்பூர் ராஜன் ,148 வது வார்டு திமுக வட்டச் செயலாளர் ரமேஷ் ராஜ் ,இளைஞராணி நிர்வாகிகள் அசோக், தியாகராஜன்,சக்கரபாணி உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.