Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

3,552 காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 2 ம் நிலை காவலர் , சிறைக் காவலர், தீயணைப்பாளர் உள்பட 3,552 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் நேரடிதேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாமென தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. ஆயுதப் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படைகளில் உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கும், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கும் இந்தாண்டு நேரடித்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு ஜூலை 7 ந்தேதி முதல் ஆகஸ்ட் 15 ந்தேதி வரை இணையவழியாக விண்ணப்பிக்கலாமென தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது. மொத்த பணியிடங்களில், மாவட்ட /மாநகர ஆயுதப்படையில், 654 இடங்கள், சிறைக்காவலர் பிரிவில் 8 இடங்களுக்கு பெண்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர். கல்வித்தகுதி ************** குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ************* ஜூலை 1 ஆம் தேதி அன்று, அனைத்து விண்ணப்பதாரர்களும், குறைந்த பட்சம் 18 வயது நிறைவு பெற்றவராக இருக்கவேண்டும். பொதுப் பிரிவினர் 26 வயதிற்கு மேற் படாதவராகவும் இருக்கவேண்டும். பிற் படுத்தப் பட்ட, மிகவும் பிற் படுத்தப் பட்ட வகுப்பினர், சீர் மரபினர் எனில் அதிக பட்சம் 28 வயதிற்கு மேற் படாதவராகவும், எஸ்சி. எஸ்டி. பிரிவினர் எனில் 31 வயதிற்கு மேற் படாதவராகவும் இருக்கவேண்டும். 3 ஆம் பாலினத்தவர் 31 வயதுக்கு மேற்படாதவராக இருக்கவேண்டும். ஆதரவற்ற விதவைகள் பிரிவில் 37 வயதிற்கு மேற் படாதவராகவும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 47 வயதிற்கு மேற்படாதவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுநிலை ************* எழுத்துத் தேர்வு, உடற் தகுதி தேர்வு, உடல் திறன் போட்டிகள் அடிப்படையில் தேர்வு செய்யப் படுவர். தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப் படும். எழுத்துத் தேர்வில், தமிழ் தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், முதன்மை எழுத்து தேர்வுக்கு 70 மதிப்பெண் ஒதுக்கப் பட்டுள்ளது. 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வினாக்கள் அடிப்படையில் எழுத்துத் தேர்வு இருக்கும். ஊதியவிகிதம் *************** ரூபாய் 18,200 - 67,100 இணைய வழி விண்ணப்பம் ************************** விண்ணப்பதாரர்கள் சீருடைப்பணியாளர் தேர்வுவாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ***************** விண்ணப்பதாரர்கள் ரூபாய் 250/- தேர்வுக்கட்டணத்தை இணையவழியிலோ, இணையமில்லா வழியில் எஸ்பிஐ வங்கியின் செலுத்துச் சீட்டு மூலம் செலுத்தலாம். சிறப்பு ஒதுக்கீடுகள் ******************* மொத்த காலிப் பணியிடங்களில் விளையாட்டு பிரிவினருக்கு 10% சதவீதமும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5% சதவீதமும், ஆதரவற்றவிதவைகள் பிரிவில் 3% சதவீதம் பேருக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதல்வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை தமிழ்மொழியை பயிற்று மொழியாக கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் 20% சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கப் படும். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0