Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

பொழுது போக்கிற்காக விளையாட ஆன் லைன் கேம் ஆப்பை டவுன்லோடு செய்து விளையாடுகிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் பணம்கிடைக்கிறது. அடுத்தமுறை விளையாடும் போதும் பணம்கிடைக்கிறது. அதற்கடுத்தமுறை பணத்தை இழப்பது போல் இழந்து, மீண்டும்பணம் கிடைக்கிறது. அதற்குப்பிறகு எவ்வளவு பணத்தையும் அதில் முதலீடாக போட்டுப்பார்க்கும் அளவுக்கு மனதை தயார்படுத்தி விடுகிறது. இந்த ஆன்லைன்ரம்மி. இந்த விளையாட்டில் இருந்து வெளியேறியவர்கள் சொன்ன பெரும்பாலான தகவல் இப்படியாகத் தான் இருக்கிறது. பணத்தை இழப்பவர்கள், மீண்டும் பணத்தை கடன்பெற்று முதலீடு செய்து விளையாடுகிறார்கள். அதிலும் தோல்வி தான். ஒரு கட்டத்தில் வெளியில் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல், இந்த விளையாட்டின் போதையில் இருந்து விடபடுவும் முடியாமல் விளையாடுபவர்கள் தற்கொலையை நோக்கிச் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த விளையாட்டால் எத்தனையோ தற்கொலைகள் அரங்கேறி இருக்கின்றன. பொதுவாக, செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணங்களை திசைத்திருப்புவதற்கான வழிகளில்தான் எல்லா ஆப்களும் களம் இறங்கியிருக்கின்றன. எந்த ஆப்பை இறக்கினாலும் ‘ஆன்லைன் ரம்மி விளையாடலாம் வாங்க. கோடிக்கோடியால் பணம் சம்பாதிக்கலாம் வாங்க’ என்று நோட்டிஃபிகேஷனைக் காட்டுகிறது. இதனைக் கண்டுகொள்ளாமல் கடந்துசெல்பவர்கள் தப்பித்தார்கள். உள்ளே சென்றால் அதன் உலகம் பயங்கரமானது. ஒருவிதமான பயத்தை உண்டுபண்ணுவதற்காக இதைச் சொல்லவில்லை. உணமையிலே இதன் முழு திட்ட வடிவத்தைப் பாருங்கள். ஆப்பை டவுன்லோடு செய்து உள்ளே வந்துவிடுகிறீர்கள். பெரிய தொகையெல்லாம் வேண்டாம் போதுமான அளவு வெற்றிபெற்று பணம் சம்பாதித்தால் போதும் என நினைக்கிறீர்கள். எதிரில் யார் ஆடினாலும் நம்மால் குறைந்த அளவிற்காவது பணத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளே செல்கிறீர்கள். முதலில் நாம் அனைவரும் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம் என்பதுதான். ஏனெனில், நமது எதிர்ப்புறம் விளையாடுவது நிச்சயமாக மனிதர்கள் இல்லை. ஏற்கனவே செட் செய்து வைக்கப்பட்ட வெறும் கோடிங்குகள் (Coding). அதாவது, Random Number Generator எனச் சொல்லப்படும் அதிநுணுக்கமான அல்காரிதம் (Algorithm) வகையால் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் உங்கள் ரம்மிக்கு ஏற்றவாறு நம்பர்களை தேர்ந்தெடுத்து அனுப்பும். வெற்றிபெற்றவுடன் உங்களது அக்கவுண்டுக்கு பணத்தை செலுத்திவிடுகிறது. பிறகு, மீண்டும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஆசையில் விளையாடுகிறீர்கள். இப்போதும் வெற்றி அடையலாம். திடீரென தோல்வியை தந்து, நமது மன ஓட்டத்தை அதைக் கண்காணிக்கிறது. நபருக்கு ஏற்றாற் போல் இந்த சோதனை மாறுபடுகிறது.  நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள், பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் வைத்து, நீங்கள் அடிமையாகி விட்டீர்களா, இல்லையா என்பதையும் அந்த அல்காரிதம் உற்றுப்பார்க்கிறது. ஒருவேளை நீங்கள் அடிமை என்று அந்த அல்காரிதம் கண்டுபிடித்துவிட்டால், ஆன்லைன் ரம்மியின் அபாயகரமான உலகில் நீங்கள் சென்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். அதற்கான வலைகளை தந்திரமாக அது வீசுகிறது. எப்படியென்றால், ஒருவேளை கொஞ்ச நாட்கள் விளையாடி பணம் வீணாகிறது என்று முடிவெடுத்துவிட்டு ஆன்லைன் ரம்மி ஆப்பை அன்இன்ஸ்டால் செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அந்த விளையாட்டின் மீது எங்கோ ஒரு ஓரம் இருக்கும் அந்த இச்சைக்கு தீனிபோடும் வகையில், மூன்று நாட்கள் கழித்து உங்கள் அக்கவுண்டில் தானாகவே பணம் வந்துவிழும். ‘போனஸாக உங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறேன் ; வா…வந்து விளையாடு’ என்று அந்த அல்காரிதம் அழைக்கும். அதன்பிறகு எல்லாம் தெரிந்த கதைதான். சரி, வெற்றிபெறும் பணத்தையாவது எடுக்க முடியுமா ?. உதாரணமாக 50,000 ரூபாய் வெற்றிபெறுகிறீர்கள் என்றால், அவ்வளவையும் ரொக்கமாக ஏடிஎம்மில் எடுக்க முடியாது. அதற்கெல்லாம் விதி வேறு வைத்திருக்கிறது இந்த ஆன்லைன் ரம்மி. இதில், லட்சக்கணக்கில் வென்று பணம் சம்பாதிக்கலாம் என்று கனவு காணாதீர்கள். ஏற்கனவே உருவாக்கப்பட்ட அந்த அல்காரிதம் எண்களைத் தாண்டி உங்களால் ஒருபோதும் வெல்லவே முடியாது. யாராவது, ஒரு கோடி ரூபாய் ஆன்லைன் ரம்மியில் வென்றிருக்கிறார்கள் என்ற செய்தியை நீங்கள் படித்ததுண்டா ? எல்லாம் அதன் அதிநுணுக்கமான தந்திரம்தான் காரணம். எனவே பொழுது போக்கிற்காக கூட ஆன்லைன் கேம் விளையாடுவதை தவிர்க்கவும். *அனுபவஸ்தன்*

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0