• முகப்பு
  • district
  • சிறந்த பெண் சாதனையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

சிறந்த பெண் சாதனையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சுதந்திர தினவிழாவில் சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதால் தகுதி வாய்ந்த பெண் சாதனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்கள் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்ப்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விருதிற்கான கருத்துருக்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 75020 34646 , 88388 72443 என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended