Author: THE GREAT INDIA NEWS

Category: district

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள குணகம் பூண்டி கிராமத்தில் உலக யோகா தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தலைமையாசிரியர் மணி, மற்றும் PTA தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தனர். குமரவேல் மற்றும் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். சுரேஷ் கணினி ஆசிரியர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சுரேஷ்பாபு விவேகானந்தா சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை, கேசவராஜ் களம் பவுண்டேஷன் யோகாவின் மேன்மையை எடுத்துரைத்தனர். யோகா பயிற்றுனர்கள் சுரேஷ் மற்றும் உதய பிரகாஷ் செயல்முறை விளக்கம் அளித்தனர். ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் யோகா பயிற்சி செய்தனர். இறுதியில் பள்ளி ஆசிரியர் T.லக்ஷ்மிநாராயணன் நன்றி உரையாற்றினார்..

Tags:

#yoga #worldyogaday #internationalyogaday #இன்றையசெய்திகள்திருவண்ணாமலை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #ulunderpettainewstodaytamil #ulunderpetflashnewstamil
Comments & Conversations - 0