• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உலக புகையிலை எதிர்ப்பு நாள்! திருநெல்வேலியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்ற, விழிப்புணர்வு பேரணி!

உலக புகையிலை எதிர்ப்பு நாள்! திருநெல்வேலியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்ற, விழிப்புணர்வு பேரணி!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 31, 2023, 7:37:23 AM

உலகில், மனித இறப்புக்களை தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில், இரண்டாவது இடத்தை வகிக்கும் புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், அதன் பயன்பாட்டினை, குறைத்திட வலியுறுத்தியும், ஆண்டு தோறும் மே மாதம் 31-ஆம் தேதி ,உலக புகையிலை எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

புகையிலை பயன்பாட்டினால் உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 லட்சம் பேர், மரணத்தை தழுவுகின்றனர். அவர்களுள் நான்கில் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் இறக்கின்றனர்.

ஆண்டு தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், இந்த எண்ணிக்கையை கணிசமான அளவுக்கு குறைக்க முடியுமென, உலக சுகாதார நிறுவனம் (WHO) நம்புகிறது.

அதன் அடிப்படையில், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் அமைந்துள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இன்று ( மே.31) காலையில், உலக புகையிலை எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இந்த விழிப்புணர்வு பேரணியை, கல்லூரி முதல்வர் டாக்டர்.சி.ரேவதி பாலன், பச்சைக்கொடி அசைத்து, துவக்கி வைத்தார்.

பேரணியில், மருத்துவக்கல்லூரி மனநலத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள், அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகள் உட்பட ஏராளமானோர், கலந்து கொண்டனர்.

மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தொடங்கி, அதனுள்ளேயே முடிவடைந்த இந்த பேரணியின் போது, அதில் பங்கேற்றவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை, கைகளில் ஏந்தி வந்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended