• முகப்பு
  • pondichery
  • சாலையில் காய்கறிகளைக் கொட்டி லாஸ்பேட்டை உழவர்சந்தையை மூடி தொழிலாளர்கள் திடீர் மறியல் போராட்டம்.

சாலையில் காய்கறிகளைக் கொட்டி லாஸ்பேட்டை உழவர்சந்தையை மூடி தொழிலாளர்கள் திடீர் மறியல் போராட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரியில் வேளாண் துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட தொழிலாளர்கள் தங்களுக்கு நிலுவை சம்பளம் ,பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.மேலும், தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி உழவர்சந்தைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இன்று உழவர்சந்தையை மூடி எதிரே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.. இந்தநிலையில்,உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் வாகனத்தில் இருந்து காய்கறிகளை இறக்காமல் தர்ணாவில் ஈடுபட்ட ஊழியர்களிடம் சென்று விவரங்களை கேட்டறிந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து உழவர்சந்தை தொழிளாலர்களின் பணி புறக்கணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தாங்கள் எடுத்து வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உழவர் சந்தை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்... விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்வதற்காக உழவர் சந்தைக்கு வந்தால் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாய பொருட்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

RELATED NEWS

Recommended