சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மர நடுகை.

மன்னார் = ரோசெரியன் லெம்பர்ட்

UPDATED: May 30, 2023, 4:25:06 AM

சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 'மரம் நடுவோம் மழை பெறுவோம்' எனும் கருப்பொருளில் கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால்  பன்னவெட்டுவான் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கும்,ஊழியர்களுக்கும் விழிப்புணர்வும் மர நடுகையும் இடம்பெற்றது.



இந்நிகழ்வானது வாழ்வுதய சூழல் பாதுகாப்பு பிரிவின் இணைப்பாளர் யேசுதாசன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.

தொழில்நுட்பக் கல்லூரியின் இணைப்பாளர். எஸ். திருப்பரன், வாழ்வுதய இயக்குனர் அருட்பணி அன்ரன் அடிகளார் ,மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட அதிகாரி திருமதி. ஜே.எம். மேரி அன்ரனிரா இ வனவிரிவாக்கல் பிரிவின் அதிகாரி . வினோத் டபரேரா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

விழிப்புணர்வு நிகழ்வின் பிற்பாடு மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்வில் 25 மாணவர்களும் 10 ஊழியர்களும் கலந்து பயன் பெற்றுக்கொண்டனர்.   

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended