• முகப்பு
  • crime
  • பழைய பப்ஸை ஏன் விற்றீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு கடைக்காரர்களை தெறிக்க விட்ட பெண்களால் பரபரப்பு !

பழைய பப்ஸை ஏன் விற்றீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு கடைக்காரர்களை தெறிக்க விட்ட பெண்களால் பரபரப்பு !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் யூனியன் ஆபீஸ் அருகில் அரோமா கேக்ஸ் என்ற பேக்கரி ஷாப் உள்ளது. இந்த பேக்கரி கடையினை கேரளாவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கடைக்கு வந்த இரண்டு பெண்கள் பப்ஸ் பார்சல் வாங்கி சென்றுள்ளனர். அப்போது வாங்கி சென்ற அந்த பப்ஸை பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கொடுத்ததாகவும், அதை சாப்பிட்ட குழந்தைகள் வீட்டில் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகின்ற நிலையில், குழந்தைகள் சாப்பிட்ட அந்த பப்ஸ்சை பெண்கள் சாப்பிட்ட போது அது வழவழப்பாக கெட்டுப்போய் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பப்ஸ் வாங்கி சென்ற அந்த இரண்டு பெண்களும் நேற்று சின்னசேலத்தில் உள்ள அந்த அரோமா கேக்ஸ் என்ற பேக்கரி ஷாப்புக்கு வந்துள்ளனர். அங்கு வந்த கெட்டுப்போன பப்ஸை விற்று ஏன் காசு பார்க்கிறீர்கள்,என கடைக்காரர்களை அந்த இரண்டு பெண்களும் கேள்விமேல் கேள்வி கேட்டு தகராறு செய்து தெறிக்கவிட்டுள்ளனர். காசு பார்க்க வேண்டும் என்பதற்காக கெட்டுப்போன எதை வேண்டுமானாலும் நீங்கள் விற்கலாம என நினைக்கிறீர்களா? எனவும் கேட்டு ஆவேசப் பட்டுள்ளனர். மேலும் பப்ஸ் சாப்பிட்டு வாந்தி எடுத்த குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ன செய்வது என்றும், அப்படி ஏதாவது நடந்தால் உங்களை சும்மா விட மாட்டோம் எனவும் கடைக்காரர்களை எச்சரித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது அந்த கடையில் வாடிக்கையாளர்களாக வந்த சிலர் , பெண்கள் ஆவேசப்பட்டு பேசி சண்டையிடுவதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். பழைய பப்ஸை விற்பனை செய்ததாகவும், அதை வாங்கி சாப்பிட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதை எதிர்த்து இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட கடைக்கு வந்து கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் பரப்பி விட்டவர்கள், தவறு செய்பவர்களை இதேபோல் தான் கேள்வி கேட்க வேண்டும் என்றும், இதே போல் காசுக்காக பழைய கெட்டுப்போன காலாவதியான பொருட்களை விற்பனை செய்கின்றவர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். சின்னசேலத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அந்த கேக் பேக்கரி ஷாப் கடையை கேரளாவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended