• முகப்பு
  • உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளா??

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளா??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். உக்ரைனில் கடந்த 24-ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து போலந்து நாட்டிற்கு அதிகளவில் மக்கள் சென்றுள்ளனர். சுமார் 10 லட்சத்து 30 ஆயிரம் பேர் போலந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஹங்கேரிக்கும், 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் ஸ்லோவாக்கியாவுக்கும் சென்றுள்ளனர். மேலும், ருமேனியா உள்ளிட்ட நாடுகளிலும் உக்ரைன் அகதிகளின் வருகை கணிசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. போர் முடிவுக்கு வராமல் தொடருவதால், அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended