Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சரியான தகவல் கிடைக்கவில்லையா மேல் முறையீடு செய்யுங்கள். மாதிரி கடிதம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மனுதார் : பெறுநர்: திரு. முதல் மேல்முறையீட்டு அதிகாரி அவர்கள், மதிப்பு மிகுந்த அய்யா / அம்மையீர், பொருள் : தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 இன் 19 ( 1 ) வது பிரிவு படி முதல் மேல்முறையீடு பார்வை : மனுதாரின் வேண்டுகோள் விண்ணப்பம் - பதிவஞ்சல் நாள் : 1. மனுதாராகிய நான் .............. மாவட்டம், .............. வட்டம், ............ ........ பகுதி /கிராமம் ................ தெரு, ............... கதவு எண் என்ற முகவரியில் குடியிருந்து வரும் .............. என்பவரின் மகனான ............... ....... வயது ............ ஆகிய நான் அகத்தூய்மையோடும் / உளப்பூர்வமாகவும் / அரசுக்கும் / அரசுத் துறைகளுக்கும் உதவும் முகமாக வழங்கும் (அபிடவிட்டு) சத்தியப்பிரமாணம் 2. பார்வையில் காணும் மனுதாரரின் எனது வேண்டுகோள் விண்ணப்பம் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி நாளது தேதியுடன் ............... நாட்கள் ஆகிறது. 3.. மேற்காணும் அரசாணை விதிகளில் வகுத்துரைக்கப்பட்டவாறு 30 தினங்களுக்குள் நிறைவேற்றுகை செய்து வழங்க வேண்டும் என்றும், இயலாது போனால் அதற்கான நியாயமான காரணத்தை மனுதாருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அரசு ஊழியர்களுக்கான நடைமுறை விதிகளை வகுத்துள்ளது இவ்விதிகளுக்கு முரணாக மனுதாரர் ஆகிய எனது கோரிக்கை மனு மீது மேற்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதையும், 4. மேற்காணும் சங்கதிகள் தமிழ்நாடு அரசு குடிமை பணி விதிகள் 17 (2) , மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகள் - 1975 இன் 20வது பிரிவு படியும், இந்திய தண்டனை சட்டம் - 1860 இன் 2-வது பிரிவு படி செய்ய வேண்டியதை செய்யவில்லை என்றாலும்,166வது பிரிவு படி கடமையை செய்ய மறுத்தல் ஆகியவை தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பதையும், அவற்றை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு எண். W. P.No.20452 of 2014 And M.P.No.1 of 2014 - தேதி 01.08.2014 என்ற தீர்ப்புரையிலும் கோரிக்கை மனு நிறைவேற்றுகை செய்வதற்காக 30 ( முப்பது நாட்களுக்குள்) நாட்களுக்கான காலவரம்பை ஏற்படுத்தி தீர்ப்புரை வழங்கியுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் - 1950 இன் 14வது பிரிவு படி எனது இந்த வழக்கிற்கும் பொருந்தும் என மனு தாராகிய என்னால் கருதப்படுகிறது. 5. மனுதாராகிய பார்வையில் காணும் எனது கோரிக்கை மனுவினை இந்த முதல் மேல்முறையீட்டு விண்ணப்பம் தங்களுக்கு கிடைத்த 15 தினங்களுக்குள் முழுமையாக நிறைவேற்றுகை செய்ய தவறும் பட்சத்திலும், வீணான அலைக்கழிப்பு செய்ய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு எனக்கு திருப்தி அளிக்காத பதில் வழங்கினாலும் / பதில் வழங்க தவறினாலும் இந்திய சாட்சிய சட்டம் - 1872 இன் 106 வது பிரிவு படி மேற்கண்ட குற்றச் செயல்களை மறைமுகமாக ஒப்புக் கொள்வதாக கருதப்படும் என்பதையும், ஆகையால் மேற்காணும் சங்கதிகளுக்காக மனுதாராகிய எனது வேலையிழப்பு / வீண் அலைச்சல் / மன உளைச்சல் ஆகியவற்றுக்கு இழப்பீடாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 இன் 19 (8) (b) பிரிவில் வகுத்துரைக்கப்பட்டவாறு இத்தகவல் வழங்க ஏற்பட்ட தாமதமான நாள் 1க்கு ரூ.250 வீதம் தண்டமாக / நஷ்ட ஈடாக தங்கள் அலுவலக பொதுத் தகவல் அலுவலரின் சம்பளப் பணத்தில் இருந்து பிடித்தம் செய்து வசூலிக்க ஆவண செய்ய வேணுமாயும், தகவல் வழங்க மறுத்த மதிப்பு மிகுந்த தங்கள் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் மீது தமிழ்நாடு அரசு குடிமைப்பணிகள் விதிகள் 17 (2) இன் படியாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மத்திய தகவல் ஆணையம் , நியூடெல்லி வழக்கு எண் .CIC / APeal/N0.42/ICPB /2006-நாள் : 03.07.2006 என்ற இவ்வழக்கில் வரையறுக்கப் பட்டவாறு முதல் மேல்முறையீட்டு அதிகாரியான தாங்களே ஒரு நீதிபதியை போல செயல்பட்டு மனுதாரின் கோரிக்கையை நிறைவேற்றுகை செய்ய வேணுமாய் மனு தாரால் மிகவும் பணிவோடு பிராத்திக்கப்படுகிறது. தங்கள் உண்மையுள்ள தேதி: இடம்:

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0