• முகப்பு
  • குற்றம்
  • பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்படுத்தும் பாதை ஆக்கிரமிப்பு மாநகராட்சி அகற்ற நடவடிக்கை எடுக்குமா.

பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்படுத்தும் பாதை ஆக்கிரமிப்பு மாநகராட்சி அகற்ற நடவடிக்கை எடுக்குமா.

மாரிமுத்து

UPDATED: May 18, 2023, 10:34:31 AM

தூத்துக்குடி வி இ ரோட்டில் சி.வ. அரசு பள்ளி உள்ளது, ஆரம்ப காலத்தில் சண்முகபுரம் பகுதியில் இருந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இந்தப் பள்ளிக்கு செல்லும் குழந்தை செல்வங்கள் புதுக்கிராமத்தில் இருந்து செல்லும் இந்த பாத வழியாக பள்ளிக்கும், பொதுமக்கள் பேருந்து நிலையம் செல்வதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

நாளடைவில் புது கிராமம் மெயின் ரோட்டில் வீடு கட்டி இருப்பவர்கள் பின்புறம் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அவரவர் வீட்டுக்கு பின்பு சுவர்களை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

ஒரு வீட்டுக்காரர் ஆக்கிரமிப்பு செய்து தோட்டம் வைத்துள்ளார், மற்றொரு வீட்டுக்காரர் பின்பு பெண்கள் தங்கும் விடுதி அமைத்துள்ளார், பிரபல தொழிலதிபர் ஒருவர் பின்புறம் ஆக்கிரமித்து குளியலறை கட்டி உள்ளார், சுமார் 30க்கும் மேற்பட்டோர் சுமார் 12 அடி அகலத்தில் சுமார் 500 அடிக்கு மேல் உள்ள இடத்தை அவரவர் ஆக்கிரமித்துள்ளனர்.

இது தொடர்பாக பலமுறை மாநகராட்சிக்கு பல்வேறு நபர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மழை காலங்களில் பள்ளியில் மழை நீர் தேங்குகிறது அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் இந்த ஆக்கிரமிப்பு பாதையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக முழு அளவில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.

மீண்டும் முன்பு போல பள்ளி செல்லும் குழந்தைகள் மாணவ மாணவிகள்  பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் புது கிராமம் முதல் வி.இ ரோடு வரை உள்ள ஆக்கிரமிப்பு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றி பொது குழுக்கள் பயன்படுத்தும் வகையில் புதியதாக ரோடுகள் போடப்பட்டு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்காகவே உள்ளது.

இதனை செயல்படுத்த மாநகராட்சி முன் வருமா என்பது பொதுமக்களின் கேள்வியாகவே உள்ளது.

சில அரசியல் அதிகாரம் படைத்தவர்கள், பண பலம் படைத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அனுமதிக்க வேண்டும் என்பது தான் கோரிக்கையாகவே உள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended