• முகப்பு
  • aanmegam
  • திருவண்ணாமலையில் பக்தர்கள் அவதிப்படாமல் கிரிவலம் நடக்குமா ?

திருவண்ணாமலையில் பக்தர்கள் அவதிப்படாமல் கிரிவலம் நடக்குமா ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மீண்டும் அனுமதி அளித்தார். அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும், அண்ணாமலையார் கோவில் மற்றும் அதன் கிரிவல பாதையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அந்தவகையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு மாதம்தோறும் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து, கார், இருசக்கர வாகனங்களில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வார்கள். பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும், வசதிக்காகவும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம் . இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் சுமார் 12.15 மணியளவில் தொடங்கி மறுநாள் (திங்கள்கிழமை) காலை 10.20 வரை உள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்றுவைகாசி மாத பிறப்பன்று வர உள்ளதால் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேடு ,தாம்பரம், வேலூர், வந்தவாசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,செஞ்சி ,ஆரணி ,புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 500 சிறப்பு பேருந்துகள் பௌர்ணமி தினத்தை ஒட்டி இயக்கப்பட உள்ளன. அதைப்போல் பக்தர்கள் கிரிவலம் சென்று விட்டு திரும்பும் போது சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பவுர்ணமி நாட்களில் ஈசான்ய மைதானம், அரசு கலைக்கல்லூரி அருகில், மார்க்கெட் கமிட்டி உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமையும். ஆனால் கடந்த மாதம் நடந்து முடிந்த சித்ரா பவுர்ணமியின் போது தற்காலிக பஸ் நிலையங்கள் கிரிவலப்பாதையில் இருந்து சுமார் 2-ல் இருந்து 3 கிலோ மீட்டர் வரை தொலைவில் அமைக்கப்பட்டு இருந்தது. அதனால் கிரிவலம் சென்ற பக்தர்கள் தற்காலிக பஸ் நிலையங்களுக்கு மீண்டும் நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்தனர். எனவே வரும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரை சுற்றி அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையங்கள் கிரிவலப்பாதையின் அருகாமையில் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் பவுர்ணமி கிரிவலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மூலம் கிரிவலப்பாதையில் தண்ணீர் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதையில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கடைகள் அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகிறது. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். ஆம்புலன்சு போன்றவை வந்தால் வழி விடுவதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended