• முகப்பு
  • சித்தர் ஆறுமுகசாமி அருள்வாக்கு வாக்கு பலிக்குமா ?

சித்தர் ஆறுமுகசாமி அருள்வாக்கு வாக்கு பலிக்குமா ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சித்ரா பௌர்ணமியன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சித்தர் ஆறுமுகசாமி வருடந்தோறும் கருப்பன் அருள்வாக்கு அருள்வார். ஏழை எளியோர் மற்றும் வசதி படைத்தவர் என்று பாகுபாடு இல்லாமல், ஒவ்வொரு பக்தர்களுக்கும் கருப்பசாமி அருளால் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் , சிறுமிகளுக்கு அருள்வாக்கு வழங்குவது வழக்கம் . கடந்த 2 ஆண்டு காலமாக தொற்றுநோய் காரணமாக அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாட்டை விதித்திருந்த நிலையில், இந்த ஆண்டு அனைத்து திருத்தலங்களும் திறக்கப்பட்ட நிலையில், கருப்பசாமியின் அருள் வாக்கை கூற ஆரம்பித்த சித்தர் ஆறுமுகசாமி , முதலில் உலகத்தைப் பற்றி அருள் கூறினார். வாக்கு குதிரை மேல் அமர்ந்து இந்த ஆண்டு கன மழையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் , வறுமையால் பசி பட்டினி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது எனக் கூறினார். பெட்ரோல் டீசல் விலை 200 ரூபாயைத் தாண்டும் அதோடு மட்டுமில்லாமல் எண்ணெய் மற்றும் பருப்பு விலைகள் கூடும் எனக் கூறினார். பின்னர் கத்திமேல் கருப்புசாமி நடந்து அருள்வாக்கு கூறினார். இரவு இரண்டு மணியளவில் படிக்காசு வழங்கப்பட்டது . இந்த சில்லரை காசுகளை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும் , விரைவில் நினைத்த காரியங்கள் நடைபெறும் என இங்கு வரும் பக்தர்கள் நம்பி வருகின்றனர் . இதனால் வருடந் தோறும் பக்தர்கள் வரிசையில் நின்று படி காசு வாங்குவது வாடிக்கையாக வைத்துள்ளனர். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் அருள்வாக்கு கூறுபவர்களின் அருள்வாக்கு பலிக்குமா என்று. ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம். இன்றைய செய்திகள் கடலூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,ஆன்மீகம்,aanmeegam,anmigam,anmeegam,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,ஸ்ரீமுஷ்ணம்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended