வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க நடவடிக்கை* வாக்காளர்அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பைமத்திய அரசு வெளியிட்டு உள்ளது. தேர்தல் ஆணைய ஆலோசனையின் படி தேர்தல்சட்ட திருத்தசட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் செயல் பாட்டிற்கு வருகின்றன. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவுசெய்வது தடுக்கப்படும். ஆனால் வேட்பாளராக நிற்கலாம். இது தவிர பதினெட்டு வயது நிரம்பிய உடனே வாக்காளராக பதிவுசெய்யும் வகையில் ஆண்டுக்கு நான்கு கட் - ஆப் தேதிகள் வழங்கப் பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தில் பாலினசமத்துவத்தை பேணும் வகையில் மனைவி என்ற வார்த்தை வாழ்க்கைத் துணை என குறிப்பிட்டு திருத்தப் படுகிறது. இதன் மூலம் தொலை தூர பகுதிகள், வெளி நாடுகளில் பணியாற்றும் ராணுவவீரர் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கைத் துணை வாக்களிக்கவாய்ப்பு ஏற்படும்.   தேர்தல் நடை முறையில் சீர் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் கொண்டு வரப் பட்டுள்ள இந்த சட்டதிருத்தம் அமலில் வந்துள்ளது. இது தொடர்பாக நான்கு அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளதாக கிரண் ரெஜிஜூ தனது ட்விட்டர்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended