Author: THE GREAT INDIA NEWS

Category: district

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட புளியங்குடி ஏரி அருகே , பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் பாலத்தின் மீது தண்ணீர் செல்வதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் தாலுகா அலுவலகம் , வட்டார வளர்ச்சி அலுவலகம் , காவல் நிலையம் , வெள்ளிக்கிழமை வார சந்தை போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க கூடியவர்கள் சுமார் 40 கிராமங்களிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் வருவது வழக்கம். இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து சுமார் 10 லட்சத்திற்கும் மேல் நிதிஒதுக்கீடு செய்தனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்கள் முன்பு தரை பாலத்தை உடைத்து, மேம்பாலம் அமைப்பதாக கூறி , அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் தரை பாலத்தை அகற்றி காங்கிரட் போடப்பட்ட நிலையில் ஒப்பந்ததாரர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவ மனைக்குச் செல்லக் கூடியவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இரவு நேரத்தில் பாலத்தின் அருகாமையில், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தவறி விழுவதும் வாடிக்கையாக உள்ளது . அரசு அதிகாரிகள் நேரடி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்து பாலம் அமைக்கப்படுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர் . ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர்

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்கடலூர் #இன்றையதலைப்புச்செய்திகள்கடலூர் #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #Tamilnadulatestnews #breakingnewstamil #Todaysnewstamil #Tamillatestnews #Tamilnewslatest #Tamilnewspaper #onlinetamilnews #tamilnews #tamilnewsportal #onlinetamilnewsportal #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil
Comments & Conversations - 0