• முகப்பு
  • tamilnadu
  • முன்னாள் அதிமுக அமைச்சர்களை கைது செய்யாதது ஏன்?

முன்னாள் அதிமுக அமைச்சர்களை கைது செய்யாதது ஏன்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் உடனே கைது செய்ய வேண்டும்! இனியும் தாமதமேன்? ஆம் ஆத்மிகட்சியின் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன் முதல்வர்ஸ்டாலினுக்கு வலியுறுத்தல்? கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மிகப்பெரும் ஊழல் நடந்து உள்ளதாக கூறி இன்றைய தமிழகமுதல்வர் அன்றைய எதிக் கட்சித்தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் ஊழல்செய்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் மீதும் அதற்கு துணை போன ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்மீதும் அடுக்கடுக்கான புகார்களை அன்றைய தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால்புரோகித்திடம் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது வழங்கினார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தனி நீதி மன்றம் அமைத்து ஊழல்செய்த அ.தி.மு.க அமைச்சர்கள் அத்தனைபேர் மீதும், ஊழல்செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்கப் பட்டு சிறைக்கு தள்ளப் படுவார்கள் என்று ஸ்டாலின் கூறினார். மேலும் அது தி.மு.கவின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப் பட்டது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் தி.மு.கழகம் 2021 ஆண்டு வெற்றி பெற்ற முதல்நாள் முதலமைச்சர் பொறுப்பு ஏற்பதற்குமுன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி விட்டு பின் அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களிடம் நான் கூறியது புதிதாக முதலமைச்சராக பொறுப் பேற்க இருக்கும் திரு. மு. க. ஸ்டாலின் முதல் பணியாக ஊழல்செய்த முன்னாள் அமைச்சர்கள் அதிகாரிகளை உடனே கைதுசெய்ய வேண்டும்! தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல ஆளுநர் பன்வாரிலாலிடம் கொடுத்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்களின் மீதான ஊழல் புகார்களின் அடிப்படையில் லோக்ஆயுக்தா மூலமாகவோ அல்லது மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டது போல தனி நீதி மன்றம் அமைத்தோ ஊழல்செய்த முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள்எடுத்து குற்றவாளிகளை சிறையில் தள்ளவேண்டும் இனி ஊழல் இருக்கக் கூடாது. ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென்று கூறினேன். ஆனால் தி.மு.க ஆட்சிக்குவந்து ஒருவருடம் ஆகியும் ஊழல்செய்த முன்னாள் அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள்மீதும் ஏராளமான புகார்கள் அதற்கான ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றும் சரியானமுகாந்திரம் இருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை. முன்னால் அமைச்சர்கள் திரு. வேலுமணி, கே. சி. வீரமணி உள்ளிட்ட சிலர்மீது மட்டுமே எப்.ஐ.ஆர் போடப்பட்டு இருந்தாலும் யாரும் இதுவரை ஊழல் வழக்கில் கைது செய்யப் படவில்லை. ஊழல் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதும் எந்தவிதமான விசாரணை கூட இன்னும்சரியாக தொடங்கப் படவில்லை. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சென்னைமாநகராட்சி ஆணையர்களாக பணியாற்றிய ஊழலில் மலிந்த எந்த ஆணையர்கள் மீதும் இது வரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை. அதே போல் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் மிகப் பெரிய ஊழல் செய்த கிறிஸ்டி நிறுவனத்தின் மீது எந்தநடவடிக்கையும் இதுவரை எடுக்கப் படவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம் மோகன்ராவ் மற்றும் அவரின்குடும்ப உறுப்பினர்கள் மீதும்ஊழல் புகார் கடுமையாக இருக்கிறது இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. வெளிப் படையான நேர்மையான ஊழல் அற்ற ஆட்சியைத்தருவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு ஊழல்செய்த முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்க தயங்குவது ஏன்? தாமதம் ஏன்? என்று கேள்வி மக்கள் மனதில் எழுந்து உள்ளது. டெல்லி ஆம் ஆத்மி கட்சி ஆட்சிபோல தமிழகமும் கல்வியிலும் சுகாதாரத்திலும் வளர்ச்சியை தர வேண்டும் என்ற நல்ல நோக்கில் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் டெல்லிசென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கி உள்ள உலகத்தரம்வாய்ந்த அரசு பள்ளிகளையும் மருத்துவ மனைகளையும் பார்த்துவந்தது பாராட்டுக்குரியது. டெல்லி கெஜ்ரிவால் ஆட்சியின்வெற்றிக்கு காரணம் ஊழலில்லாத ஆட்சியைத்தந்ததும் இந்தியாவிலேயே கடனில்லாத மாநிலமாக டெல்லியை மாற்றியிருப்பதே ஆகும். ஸ்டாலின் தமிழகம் இந்தியாவில் ஒருதரமான மாநிலமாக முதன்மையானமாநிலமாக உருவாக்கவேண்டும் என்றால் டெல்லிமாநிலத்தை போல் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும். முதல் நடவடிக்கையாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக லோக்ஆயுக்தாவை வலுப் படுத்த வேண்டும். லோக்ஆயுக்தாவின் மூலம் ஊழல் செய்தமக்கள் பணத்தை கொள்ளையடித்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது தயக்கம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தி.மு.க ஆட்சியிலும் எந்தஅமைச்சர்கள் அதிகாரிகள் தவறு செய்தாலும் அவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சமீபத்தில் பஞ்சாபில் ஆம்ஆத்மிகட்சியின் ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் ஒரு மருந்துதயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு சதவிகித கமிஷன்கேட்டதற்காக அதாவது ஒரு கோடி 14 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதற்காக அவர் சஸ்பெண்ட்செய்யப் பட்டு கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டு இருக்கிறார். டெல்லி பஞ்சாப்போலவே மு. க. ஸ்டாலின் அவர்களும் யார் தவறுசெய்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் மக்கள்பணியாற்ற தான் நாம் ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்பதை மனதிலேந்தி தவறுசெய்தவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் அவர்களை ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சியாக தமிழக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். என ஆம் ஆத்மி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறினார். செய்தியாளர் மோ. மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended