Author: THE GREAT INDIA NEWS

Category: district

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட புளியங்குடி ஊராட்சி எழுந்திரு வான குப்பம் கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ஒரு நீர்த்தேக்கத் தொட்டியும் ஒரு மினி பவர் டேங்க்கும் இயங்கிவரும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக பொது மக்கள் குடிநீருக்காக வயல்களில் உள்ள மோட்டாரில் குடிநீர் பிடித்துக்கொண்டு அன்றாடம் உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு நீர்த்தேக்கத் தொட்டியின் படி பழுதடைந்து கீழே விழுந்த உள்ளதால் சரியான முறையில் நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்வதும் இல்லை அதோடு மினி டேங்க் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் வயல்களில் உள்ள நீர் மோட்டார்களில் பொதுமக்கள் தண்ணீர் கொண்டுவந்து அன்றாடம் உபயோகித்து வருகின்றனர். இதனால் அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் அரசு அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அழுத்தம் கொடுத்தும் ஊராட்சி மன்ற தலைவர் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தங்களுக்கு குடிநீர் வசதி அமைத்துத் தருமாறு பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நீர்த்தேக்க தொட்டி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் வட்டார வளர்ச்சி அலுவலர் முற்றுகையிடப் போவதாக கூறி வருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0