Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்ட உள்ள பல்நோக்கு மகப்பேறு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி புதியதாக கட்டியுள்ள அதிநவீன அவசர சிகிச்சை மையம் கட்டிடத்தை திறந்து வைத்து அதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் துரை ரவிக்குமார் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகிய நேரில் பார்வையிட்டனர் . அப்பொழுது அதிநவீன அவசர சிகிச்சைக்கான உள் வலிகளுக்கான பிரிவை பார்வையிட்டார் அங்கு முறையாக பணி செய்யாததால் மேல்தளத்தில் இருந்து தண்ணீர் கசிவதை நேரில் பார்வையிட்டு உடனடியாக சீர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சிறப்பு மருத்துவ மையத்தை பார்வையிட்ட பின் அங்கிருந்து நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழகத்தில் சிறந்த முறையில் அவசர சிகிச்சை செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் காலிப்பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார் . தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சவர்மா உணவு என்பது நமது உணவு இல்லை , நாம் பாரம்பரியமாக சாப்பிடும் உணவு நம் உடலுக்கு எந்த கேடும் இல்லை, சவர்மா என்கிறது பழைய கறியை 4 நாள் 5 நாட்கள் வைத்து , அதனை வெளியில் தொங்கவிட்டு சமைத்து சாப்பிடுவது தான் ,அது மேலை நாடுகளில் சமைத்து சாப்பிடுவது சரி ஏனென்றால் அங்கு இறைச்சிகளை பாதுகாப்பான முறையில் வைத்து குளிரூட்டப்பட்டு அதனை சமைத்து சாப்பிடுகின்றனர். ஆனால் அது போன்ற வசதிகள் தமிழகத்தில் இல்லை மேலும் கேரளாவிலும் இல்லை, இதனால் தான் கேரளாவில் புதியதான ஒரு நோய் மக்களை தாக்கி வருகிறது அந்த நோய் தமிழகத்தில் வராமல் இருக்கவேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தில் சவர்மா உணவு தடை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் சவர்மா உணவு தயாரிக்கும் உணவகங்களில் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கெட்டுப்போன மாமிசத்தை சாப்பிடக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில் , கேரளாவில் பதப்படுத்தப்படாத இறைச்சிகளை சாப்பிட்டதால் தான் "சிக்கலா " என்ற புதிய நோய் கேரளாவில் மக்களை தாக்கி வருகிறது. அதற்கு இதுபோன்ற மாமிசங்களை சாப்பிடுவதே காரணம் என்பதால் தான் தமிழகத்தில் தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags:

#இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #kallakurichinewstodaytamil #kallakurichiflashnewstamil #shawarmabannedintamilnadu #shawarma #radhakrishnan
Comments & Conversations - 0