Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியது யார்? பொது மக்கள் கேள்வி. உயர் நீதிமன்ற உத்திரவுப் படி ஹெல்மெட் வேட்டையாடும் காவல்த்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகிறோம். பஸ்ஸில் பயணம்செய்ய 55 பேருக்கு மட்டுமே அரசு பர்மிட் தரப்படுகின்றது. ஆனால் சராசரியாக 120 பேர் வரை திணிக்கப் படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் பதினெட்டு பேர் தொங்க விடப்படுகின்றனர். ரயிலில் ஒரு பெட்டிக்கு 72 பேர்தான் அனுமதி ஆனால் பயணம்..? 160 பேர் பயணம். 3. ஒவ்வொரு பத்திரப் பதிவு அலுவலகத்திலும் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்குமா? 4. ஓவர்லோடு கேஸ் போட்டால் லாரி பஸ் ஓடாது. 5. Share Auto வில் 22 பயணிகளை ஏத்தறாங்க. தடுக்கலாமே? 6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்விகேட்டா படம் தெரியுமா மக்களுக்கு. தடுக்கலாமே? 7. Point to point Lss Express அடடா. கட்டணக் கொள்ளையை இரண்டே நாளில் அரசுதடுக்கலாமே? 8. ஸ்டாம்ப்பேப்பர் 20% அதிகவிலை. ஒருநாள் போதுமே. தடுத்து விடலாம். 9.பஸ்ஸுல இரண்டு ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக்கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம். 10. 30 ரூபாய் டிக்கெட் 90 ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய் 20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன் மேல? ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுமாம் … ஊழல்செய்து சிக்கிய மந்திரிகளின் சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் . பலமாடி கட்டிடங்கள் இடிந்து பலபேர் பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை பறிமுதல்செய்ய மாட்டார்கள் .. தவறான மருத்துவத்தால் பலபேர் பலியாகியும் மருத்துவம் பார்த்த மருத்துவர்களின் சான்றிதழ்களை பறி முதல் செய்ய மாட்டார்கள் . ஆற்றுமணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் வருவாய் துறை அதிகாரிகளின் பதவிகளை பிடுங்க மாட்டார்கள் . மலைகளே காணாமல்போகும் அளவிற்கு கணிமவளகொள்ளைக்கு உடந்தையாகிருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் . “மறந்துவீட்டில் விட்டு விட்டு போய் விடும் ஹெல்மெட்டுக்காக உங்கள் இரு சக்கர வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுமாம்” கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை பண்ணாணாம்…! ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடிகொடுக்கும் நீதியரசர்களே காவல்த்துறையினரே! உங்களிடம் சாமானியமக்களில் ஒருவனாக சிலகேள்விகள் கேட்க ஆசைப் படுகிறோம். ஹெல்மெட் அணியாமல்வந்த கிட்டத் தட்ட 1,40,000 பேர் வரை வழக்குபதிவு செய்து வாகனங்களை பறிமுதல்செய்து நீதி மன்றத்தில் அலைய வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே. புகைப்பிடித்தால் மரணம்நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகியநுரையீரல் படத்தை மட்டும் போட்டுவிட்டு விற்பனைசெய்ய அனுமதி அளித்து உள்ளது சரியா? குடிப் பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டுவிட்டு அதை அரசாங்கமே விற்பனைசெய்வது நியாயமா…. நீங்கள் தீர்த்துவைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது சாமானியமக்களை வாட்டிவதைக்கும் இந்தவழக்குகள் அவசியம் தானா. …. தமிழகத்திலுள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என உங்களால் உத்தர வாதம் அளிக்க முடியுமா? நீதி பதிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு பத்துநாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்களில் வலம்வந்து ஒரு விழிப் புணர்வு ஏற்படுத்தி காட்ட முடியுமா. ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லை என்று மறுக்க முடியாது. அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்குப்பொருந்தும்.. 20 – 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகர வாசிகளை ஏதோ குற்றவாளிகளைபிடிப்பது போல் விரட்டிவிரட்டி பிடிப்பது தான் உங்களுடைய விருப்பமா…? சமீபத்தில் ஹெல்மட்அணியாத ஒருத்தரை ஒரு காவலர்விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கிபலியானார்… இந்த சட்டம் அமலுக்குவந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகியுள்ளார்களே அதற்கென்ன விளக்கம் தரப்போகிறீர்கள். . சாலை விதி முறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டாயப்பாடமாக கொண்டுவந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே… ஹெல்மெட்_அணிவதால். … சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலை வலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. .. கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்குசாதகமாக அமைகிறது… ஹெல்மெட் அணிவதன் அவசியத்தைமட்டும் வலியுறுத்தி விட்டுபோகலாமே… வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாதஅக்கறை உங்களுக்கு ஏன். …? இப்பொழுது சொல்லுங்கள் ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப் படுத்துவது எந்தவகையில் நியாயம்…. என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கேட்கின்றனர் இந்த செய்தியை ஏற்றுக்கொள்பவர்கள் முடிந்த அளவுக்கு ஷேர் பண்ணுங்கள்..! *அனுபவஸ்தன்*

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0