• முகப்பு
  • other
  • வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது அட்டகாசமான 2 புதிய அப்டேட்கள்...

வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது அட்டகாசமான 2 புதிய அப்டேட்கள்...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வாட்ஸ் அப் பயனர்களின் அனுபவத்தை மேம் படுத்தும் வகையில் குழுக்களுக்கு 2 அம்சங்களை சோதனைசெய்து வருவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப்நிறுவனம் சமீபத்தில் குழு அட்மின்களுக்கு ஒரு சிறப்பு அதிகாரத்தை வழங்கியது. இதன்மூலம் குழுவில் உறுப்பினர்கள் பகிரும் எந்தசெய்தியையும் அட்மின்கள் நீக்கமுடியும். இந்நிலையில் குரூப்களில் மேலும் 2 புதிய அப் டேட்க்களை வழங்க அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது. அப்டேட் 1 : முதல் அப்டேட் பயனர்களை சத்தம் இல்லாமல் குழுக்களிலிருந்து வெளி ஏற அனுமதிக்கும் அம்சமாகும். இதன் மூலம் நீங்கள் ஒருகுழுவில் இருந்து வெளியே ஏறினால், அந்தத்தகவல் குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியப் படுத்தாமல், குழுவின் அட்மினுக்கு மட்டுமே தெரியப் படுத்தப்படும். "சைலண்ட் க்ரூப்எக்சிட்" ( Silent Group Exit ) என்ற இந்த அம்சம் டெஸ்க் டாப் பதிப்பில் முதலில் அறிமுகமாகவுள்ளது. அப்டேட் 2 : இந்த அம்சம், கடந்த காலத்தில் வாட்ஸ் அப் குழுவில் இருந்த அனைவரையும் பார்க்க அனுமதிக்கும். View Past Participants என்றபெயரில் வெளியாக உள்ளது. இதன் மூலம் கடந்தகாலத்தில் குரூப்பை விட்டு வெளியே ஏறியவர்கள் யார் என்பதைக்கண்டறிய உதவும். ஆனால், அமைதியான குழுவைவிட்டு வெளியே ஏறும் முதல் அப்டேட்டை இது கேள்விக்கு உள்ளாக்குகிறது. குழுவின்பழைய பங்கேற்பாளர்களைப்பற்றி யாராவது தெரிந்துக்கொள்ள விரும்பினால், குழுவின் சுயவிவரப்பகுதியைப் பார்வை இடுவதன் மூலம் ஒருவர் அதைச்செய்ய முடியும். View Past Participants என்றஆப்ஷனில் அதைப்பார்க்கலாம். ஆனால் குழுவின்அட்மின்கள் நினைத்தால் இந்தஆப்ஷனை உறுப்பினர்கள் பயன் படுத்துவதை தடுக்கஇயலும் வசதியும்வழங்கப் படும் என வாட்ஸ் அப் தெரிவித்து உள்ளது. இந்த இரண்டு அப்டேட்களும் எப்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்பதை வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவிக்கவில்லை. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி.

VIDEOS

RELATED NEWS

Recommended