• முகப்பு
  • political
  • திமுக பாஜக கூட்டணி ,காங்கிரஸின் நிலைமை என்ன ?

திமுக பாஜக கூட்டணி ,காங்கிரஸின் நிலைமை என்ன ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பேரறிவாளன் விடுதலைவிவகாரத்தில் திமுக மீது காங்கிரசுக்கு ஏற்பட்டு உள்ள அதிருப்தியால் அந்தக்கட்சியை கை கழுவி விட்டு பாரதியஜனதா பக்கம் திரும்புவதற்கு திமுக தயாராகிவருவதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் வருகின்ற ஜூலை மாதம் நடக்கவுள்ளது. தற்போதையநிலையில் பாரதியஜனதாவுக்கு 9,194 வாக்குகள் தேவைப் படுவதாக கூறப் படுகிறது. இதனால் சில மாநிலக்கட்சிகளின் ஆதரவை பெற பாரதியஜனதா முயற்சித்து வருகிறது. இந்த சூழலில் தான் வருகிற 28 ஆம்ந்தேதி கருணாநிதி சிலையை திறக்க துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைக்கப் பட்டுள்ளார். அவரும் ஒத்து கொண்டு உள்ளார். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் மிகுந்த பிடிப்புக்கொண்ட அவரை கருணாநிதிசிலை திறப்புக்கு அழைத்ததும் அதை அவர் ஏற்றுக்கொண்டதும் திமுக பாரதியஜனதா இடையேயான நெருக்கத்தை காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது. தற்போது வெங்கையாநாயுடு ஊட்டியில் ஓய்வெடுத்து வருகிறார். முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலினும் மலர் கண் காட்சியை திறந்து வைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக ஊட்டிசென்றுள்ளார். இருவரும் சந்தித்துபேசவும் வாய்ப்பு இருப்பதாக கூறப் படுகிறது. மாறிவரும் இந்த அரசியல் சூழ்நிலையால் பாரதியஜனதா பக்கம் திமுகசெல்லவும் வாய்ப்பிருப்பதாக பேசப் படுகிறது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended