உணவை அள்ளி சாப்பிடிவதில் சிறந்த முறை எது?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்தியர்கள் ஏன் உணவை கையில்சாப்பிடுகிறார்கள் ? கைகளில் உணவுபிசைந்து சாப்பிடுவதிலும் தனிருசி இருக்கிறது. நம் இந்தியர்களுக்கு எத்தனை விலையுயர்ந்த ஸ்பூன்களில் சாப்பிட்டாலும் கைகளில்பிசைந்து சாப்பிட்டால் தான் உண்டதிருப்தி இருக்கும். அந்ததிருப்தி எவ்வாறுவருகிறது என்பது தெரியுமா? ஒவ்வொருவிரலும் மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றைச் சொல்கின்றன. அதாவது கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடு விரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சிறு விரல் நீரையும் கொண்டிருக்கின்றன. இவை மூன்றையும் ஒன்றுசேர்த்து சாப்பிடும் போது உணவின்சுவை மூளையை எட்டுகிறது. அந்தஉணவை தொடும் உணர்வு கவனச்சிதறல் இல்லாமல் உணவின்ருசி, மணம் அறிந்து உண்ண வைக்கும். இதுத்தவிர....... ஜீரணசக்தியை அதிகரிக்கும். நம் உள்ளங்கைகளில் நார்மல்ஃப்ளோரா என்ற பாக்டீரியா இருக்கிறது. அது சுற்றுச்சூழல் பாதிப்பால் உட்செலுத்தப் படும் சில கிருமிகளை அழிக்கவல்லது. அதே போல அந்தக்கிருமியால் வாய், தொண்டை மற்றும் குடல் ஆகியவை பாதுகாக்கப் படுகிறது. மேலும் இதுஜீரண சக்தியையும் அதிகரிக்கும். அதிக உணவு உட் கொள்வதைத் தவிர்க்கலாம். பொதுவாக கைகளில் சாப்பிடும் போது மெதுவாகவே உண்போம். விரலை நீக்கி பிரித்து சாப்பிடக்கூடாது. உள்ளங்கையில் உணவு ஒட்டக்கூடாது. நகம் வளர்க்கக் கூடாது. 32 வாய் சாப்பிட்டாலே போதும். நன்றாக மென்று எச்சிலும் சேர்த்து விழுங்கினால் உடலுக்கு நல்லது. அதனால் நீங்கள் மென்றுண்ணும் போது வயிறு அதைவிரைவாக ஜீரணித்து விடும். இதனால் உங்களுக்கும் அந்த உணவுபோதுமானதாக இருக்கும். இதனால் அதிகமாக உண்ணமாட்டீர்கள். அதே போல நாம் கைகளை குவித்து சாப்பிடத்துவங்கும் போதே, மூளை நம்உடலுக்கு ஜீரண சக்திக்கான கட்டளையை அனுப்பிவிடும். உடனே கல்லீரலும் ஜீரணசக்திக்கான ரசாயனத்தை உற்பத்திசெய்ய ஆரம்பித்துவிடும். உடல் நோய்கள் வராது கைகளில் சாப்பிடுவது உடல் தசைகளுக்கான உடற் பயிற்சி போன்றது. இதனால் இரத்த ஓட்டம் சீராகிறது. உடல் சுறு சுறுப்பு அடைகிறது. உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப் படுகிறது. அது மட்டும் இன்றி இரத்தக்கொதிப்பு நோயும் குறைவதாகக்கூறப் படுகிறது. அதே போல பல நோய்கள் கைகளின் மூலமாகவும் உடலுக்குப்பரவுகின்றன. இதனால் குறைந்தது உணவுண்பதற்காகவே ஒரு நாளைக்குக் மூன்று முறையாவது கைகளைக்கழுவும் பழக்கம் கொண்டிருப்போம். இதனாலேயே நோய்த் தொற்றுக்கிருமிகள் அழிந்து விடுகின்றன. இந்தியா மட்டும் இல்லாமல் ஆப்பிரிக்கா, மத்தியக்கிழக்கு நாடுகள் ஆகிய இடங்களிலும் கைகளில் தான் உணவைஉட்கொள்கிறார்கள். அமெரிக்காவிலும் கைகளில் உண்பதால் ஏற்படும் நன்மைகளைத்தெரிந்து கைகளில் உண்ண, பழகி வருகிறார்கள். அதே போல அமெரிக்க ரெஸ்டாரண்டுகளில் கிடைக்கக்கூடிய இந்திய உணவுகள், மெக்ஸிகன் உணவுகள், மத்தியகிழக்கு உணவுகளை அமெரிக்கர்கள் உண்ணும் போதும் கைகளில் தான் உண்ணுகிறார்கள். #அனுபவஸ்தன்.

VIDEOS

RELATED NEWS

Recommended