• முகப்பு
  • tamilnadu
  • அதிமுக எதிர்காலம் பிர(ச்சினை)சன்ன சோதிடம் என்ன சொல்லுது?

அதிமுக எதிர்காலம் பிர(ச்சினை)சன்ன சோதிடம் என்ன சொல்லுது?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வருங்கால அதிமுக கட்டம் சரி இல்லாததால் நிலை இது தான் என தொண்டர்கள் புலம்பல். ஆம் பிரசன்ன ஜோதிடப்படி அதிமுகவில் யார் அதிகார பதவிக்கு வந்தாலும் அவர் உள்ளே போவது உறுதின்னு ராசிகட்டம் சொல்லுது. உதாரணமாக ஜெயலலிதா மற்றும் சசிகலா வை எடுத்துக்கொள்ளலாம். அடுத்து இரட்டை ஒற்றையானால் ஒற்றை ஒன்பதாகும். ஐயோ... என்ன பெரிய குண்டா கீதே.... ஆமாங்க... எடப்பாடி அதிமுகவை புடிச்சா.... எஸ்டேட் அவரை புடிக்கும். பொறவு.... அவருக்கு ஆதரவு தரும் அல்லக்கை முன்னாள்கள் நாற்காலிக்கு சண்டை போடும் அதனால... மீண்டும்... ஒற்றை தலைமை ஒன்பது தலைமையாகும். சரி... ஓபிஎஸ் கைக்கு போனா....? அவருக்கும் விதிவிலக்கல்ல..... வரும்பாருங்க அரஸ்ட் வியாதி. ஆக.... அடுத்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக மற்றும் இரட்டை இலை கிழிந்து நார்நாராக தொங்கி காய்ந்திருக்க வாய்ப்பு. காரணம் கிழ சிங்கமும் நான்கு அடிமை மாடுகளும் தான். சசியை உள்ளே அனுப்பிவிட்டு எடப்பாடி எப்படி முதல்வர் ஆனாரோ..... அதே நிலை எடப்பாடிக்கு அவரது கோடிகள் பெற்ற கூலிகளால் விளையும். அப்போது... ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் சினை ஒருங்கிணைப்பாளர் வினை ஒருங்கிணைப்பாளர் தினை ஒருங்கிணைப்பாளர் என ஒருங்கிணைப்பாளர்களை எல்லாம் ஒருங்கிணைக்க ஒரு ஒருங்கிணைப்பாளர் (நாட்டாமைப் பதவி) பதவியும் உருவாகும். அதுமோடிக்கு கிடைக்க வாய்ப்பு. ஆனால் இப்ப இருக்கும் இருதலைகொள்ளி தலைமை இப்படியே போனா போராட்டமா இருந்தாலும் தேரோட்டமா நடக்கும். ஆக... அதிமுகவுக்கு ஒற்றுமை அவசியம். சரிங்க.... எனது ஐயத்திற்கு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். அதாவது... சசிகலா ஜெயிலுக்கு போனா எடப்பாடி முதல்வரானார். எடப்பாடி பொது செயலாளர் ஆகி ஜெயிலுக்கு போனா அடுத்த பொது செயலாளர் யார்? நிற்க. ஓபிஎஸ் பொது செயலாளர் ஆகி ஜெயிலுக்கு போனா அடுத்தது யார் பொது செயலாளர்? அனுபவம் தேடும்..... ***அனுபவஸ்தன்***

VIDEOS

RELATED NEWS

Recommended