அதிமுக சட்டம் என்ன சொல்கிறது?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அதிமுகவின் சட்டவிதிகள் ************* 2017 ஆம் ஆண்டு நடை பெற்ற அ.தி.மு.க பொதுக் குழுவில் பொதுச்செயலாளர் பதவி ரத்துசெய்யப் பட்டு அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப் பட்டன விதி எண் 20 பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப் பட்டன . விதி எண் 19 ஒருங்கிணைப்பாளர்கள், அவைத் தலைவர், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச்செயலாளர்கள் உட்பட மூத்த நிர்வாகிகள் அடங்கிய பொதுக் குழுவே உச்ச பட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும் விதி எண் 19 ( பிரிவு 7 ) ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது அதற்கு மேற்பட்டோ பொதுக் குழு கூட்டலாம், 5 ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக் குழுவை கூட்ட வலியுறுத்தினால் 30 நாட்களுக்குள் கண்டிப்பாக கூட்டப் பட வேண்டும் . விதி எண் 20 மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவே நிரந்தர பொதுச் செயலாளர் என்பதால், அவர் வகித்த பொறுப்பிற்கு இனி யாரும் தேர்ந்தெடுக்கவோ, நியமிக்கப் படவோ மாட்டார்கள் விதி எண் 30 ( பிரிவு 5 ) உட் கட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended