• முகப்பு
  • அரசியல்
  • திருவள்ளூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

திருவள்ளூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

சுரேஷ் பாபு

UPDATED: May 6, 2023, 10:15:23 PM

தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா:  595 பயனாளிகளுக்கு ரூ.1.85 கோடி மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில்  பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர்  வழங்கி பேசினார். 

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர்  2 ஆண்டு காலமாக சொன்னதையும், சொல்லாததையும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இந்நாட்டு மக்களுக்காக நல்லதொரு திட்டங்களை அறிமுகப்படுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

மே 7-ம் தேதி 2-ம் ஆண்டு முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில்  மாவட்ட கலெக்டர் இந்த நலத்திட்ட உதவிகளை வழங்க குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்தார். 

கடந்த ஆட்சியில் நிதி நிலை அறிக்கையில் ரூ.62 ஆயிரம் கோடி நிதிசுமை வைத்து சென்றனர். ஆனால், தற்பொழுது  தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.32,000 கோடியாக குறைத்து, இந்த ஆண்டு ரூ.30,000 கோடியாக்கிய பெருமை தமிழ்நாடு முதலமைச்சரையே சாரும். அடுத்த ஆண்டு இன்னும் நிதி நிலை சுமை குறையும் என்று பேசினார். 

இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்  டி.ஜெ.கோவிந்தராஜன் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ் காக்களூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended