• முகப்பு
  • டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றுவதற்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு .

டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றுவதற்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் நகர்மன்ற தலைவர்  புவனப்பிரியா செந்தில் தலைமையில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்ற முதல் நகர்மன்ற கூட்டத்தில் 45 க்கும் மேற்பட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக திருவாரூர் தெற்கு வீதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்ய கோரி நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாரூர் தெற்கு வீதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவில் தில்லைக்கு முன்பிருந்தே உள்ள திருக்கோயிலாகவும், சைவ சமயத்தின் தலைமை கோயிலாகவும் உள்ள தியாகேசப் பெருமான் கோயிலும்,ஆழித்தேரும் திருவாரூரின் பெருமைமிகு அடையாளங்கள் என்பது அனைவரும் அறிந்தது. இது திட்டமிட்டு தமிழர்களின் தொன்மை பண்பாட்டு ரீதியிலான அடையாளங்களை அழிக்கும் முயற்சியாக கருதுகிறோம். திருவாரூரில் நீண்ட காலமாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளான பாதாள சாக்கடை பழுதுகள்,பழைய புதிய பேருந்து நிலைய சாலை,மழைநீர் வடிகால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிக்கல்களை தீர்க்காமல் படம் போன்ற மக்கள் விரோத செயல்களில் நகராட்சிகளுக்கும் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பெருங் கோயில்களின் நான்கு வீதிகளும் திசையை குறிப்பதாகவே இருக்கின்றன.இந்த நிலையில் எந்த கோரிக்கைகளும் இல்லாத போதும்,தேரோடும் தெற்கு வீதிக்கு பெயர் மாற்றம் கோரும் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது. எனவே திருமணத்தை ரத்து செய்திட ஆவன செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில்  நாம் தமிழர் கட்சி திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் பால்ராஜ்,மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வினோதினி,தொகுதி செயலாளர் ஜெயபிரகாஷ், உழவர் பாசறை பொறுப்பாளர் ஸ்டாலின்,நகர மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் பூங்கொடி, பிரியா, ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவாரூர் செய்தியாளர் இளவரசன். இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvarur news,Today tamil news,Latest thiruvarur news,District news,Naam Thamilar Katchi,dmk

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended