• முகப்பு
  • இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வெலிங்டன் காவல்நிலையத்தில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என வழ?

இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வெலிங்டன் காவல்நிலையத்தில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என வழ?

School

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு. வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்ட பிபின் ராவத் உள்ளிட்ட 13  பேரின் உடலுக்கு அரசு உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் அஞ்சலிக்கு பிறகு உடல் சூலூர் விமானப்படைக்கு சாலை மார்க்கமாக கொண்டுசெல்லப்பட்டது. உடல்களை எடுத்துக்கொண்டு சாலையில் சென்ற ராணுவ வாகனத்திற்கு  ஆங்காங்கே திரண்டு நின்ற பொதுமக்கள் வழிநெடுக அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக வெலிங்டன் காவல்நிலையத்தில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பு (174 ஆவது பிரிவு) என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended