• முகப்பு
  • education
  • தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ)– 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ)– 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

2022-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50 விண்ணப்பதாரர் Debit Card/Credit Card/Net Banking/G-pay வாயிலாக செலுத்தலாம். 24.06.2022 அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கப்படவுள்ளது. 20.07.2022 அன்று இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் ஆகும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் சேர்க்கை உதவி மையம் மின்னஞ்சல் முகவரியிலும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். 1. அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் மின்னஞ்சல் முகவரி: [email protected] அலைபேசி எண்: 9499055881 &8072345080. 2. அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆலத்தூர் மின்னஞ்சல் முகவரி: [email protected] அலைபேசி எண்: 9499055884. 3. மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள்: மின்னஞ்சல் முகவரி: [email protected] அலைபேசி எண்: 9488451405. இவ்வாறு தெரிவித்துள்ளார். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended