• முகப்பு
  • கல்வி
  • திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி மலேசியா ஜியோமேட்டிக பல்கலைகழகத்தினுடனான புரிந்து ஒப்பந்தம் 

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி மலேசியா ஜியோமேட்டிக பல்கலைகழகத்தினுடனான புரிந்து ஒப்பந்தம் 

முத்தையா

UPDATED: May 28, 2023, 7:00:00 PM

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனம் மற்றும் மலேசியாவில் உள்ள ஜியோ மேட்டிக பல்கலைகழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்லூரியின் சார்பில் இயக்குநர் டாக்டர். அர்த்தனாரீஸ்வரன்,

இணைச் செயலர் டாக்டர். ஸ்ரீராகநிதி அர்த்தனாரீஸ்வரன் நிர்வாக இயக்குநர் டாக்டர் குப்புசாமி, மலேசியா ஜியோமேட்டிக பல்கலை கழகத்தின் சார்பில் அதன் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் இஸ்மாயில் பின் ஹாஜி உமர் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மலேசியாவில் நடந்த இந்த நிகழ்வில் விவேகானந்த மகளிர் பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் டாக்டர் விஜயகுமார், டாக்டர் தேவி, விவேகானந்த கலை மற்றும் அறிவியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி ஷகிலா . ஆகியோர் உடனிருந்தனர்.

இந்தஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கல்லூரிகளின் உயிரித் தொழில்நுட்பத் துறைகள் தங்கள் ஆராய்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன. 

மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்வியில் ஒத்துழைப்பு தருதல், ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை பெறப்பட்டு இதன் மூலம் ஆசிரியர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளை ஜியோ மேட்டிக-வின் ஆய்வக வசதிகள்,

பயன்பாடு, ஆசிரியர் மேம்பாட்டுத் திறன் பயிற்சி, செயல்முறைத் திட்டங்கள் மற்றும் ஆய்வுகள், காப்புரிமை, இண்டர்ன்ஷிப் ஆகிய வற்றைப் பெறமுடியும். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் பாடங்களை இலவசமாக பதிவு செய்து கற்றுக் கொள்ளலாம். 

மேலும் மாணவிகள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை ஆராய உதவும். இந்த ஒப்பந்ததிற்கான உதவிகளை மலேசியா ஜியோமேட்டிகா பல்கலைகழக  பேராசிரியர் டத்தோ.சர்.டாக்டர் அசிமுதீன் பின் பஹாரி,

துணைவேந்தர் கல்வியாளர் மற்றும் டாக்டர் சுவாமிநாதன் கயாரோஹணம், டீன், உயிர் பொருளாதாரம் மற்றும் சுகாதார அறிவியல் ஆகியோர் மேற்கொண்டனர்.

ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக மலேசிய பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல கல்லூரி திட்டமிட்டுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended