Author: இளவரசன்

Category: அரசியல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கண்ணன்மேடு தலைக்காடு கிராமததில் நீர் நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசு 105 குடும்பங்களை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் அப்பகுதியில் பொதுமக்களுக்கு அரசு நிர்வாகம் ஐந்து தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வந்த ஏழை எளிய மக்களை நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி முழுவதும் உள்ள குடிசை வீடுகள் கான்கிரிட் வீடுகள் அகற்றப்பட்ட

நிலையில் அகற்றப்பட்ட வீடுகளில் வசித்த பொது மக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் அரசு நிர்வாகம் கான்கிரீட் வீடுகள் அமைத்து தர வேண்டும் என்கிற ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இரண்டு மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரையிலும் அப்பகுதி பொதுமக்களுக்கு எந்தவிதமான கான்கிரீட் வீடுகள் மாற்று இடங்கள் மின்சார வசதி சாலை வசதிகள் செய்து தர மறுத்து வரும் நிலையில்,

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமையில் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு முன்னாள் மாவட்ட செயலாளர் அமுதா இனியன் மற்றும் கட்சியின் கருத்தியல் மைய மாநிலச் செயலாளர் அமுததுரை அரசன் மற்றும் காரைக்கால் மன்னார்குடி கூத்தாநல்லூர் லட்சுமங்கொடி திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

#thiruvarurnewstamil #vck #indrayaseithigaltamilnadu #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #thiruvarurnews #thiruvarurnewslive #thiruvarurnewstoday #thiruvarurnewsintamil #indrayaseithigalthiruvarur #thiruvarurlatestnews #thiruvarurtodaynews #இன்றையசெய்திகள்திருவாரூர் #இன்றையமுக்கியசெய்திகள்திருவாரூர் #இன்றையதலைப்புச்செய்திகள்திருவாரூர் #thegreatindianews #tginews #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு
Comments & Conversations - 0