• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • விழுப்புரம் மரக்காணம் பேரூராட்சி தர்மாபுரி வீதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மக்கள் எதிர்ப்பு.

விழுப்புரம் மரக்காணம் பேரூராட்சி தர்மாபுரி வீதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மக்கள் எதிர்ப்பு.

மேஷாக்

UPDATED: May 12, 2023, 8:27:41 PM

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி தர்மாபுரி வீதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில்.

இது சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் 21 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த கோயிலுக்கென தனி வருவாய் ஏதும் இல்லை.

இந்நிலையில் இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கு திருவிழா நடத்தும் பொதுமக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது, அதிகாரிகள் கூறுகையில், இந்த கோயிலை அறநிலத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என ஒரு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இதன் காரணமாகத்தான் நாங்கள் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் எடுக்க ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினர். 

இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடந்த 8-ந்தேதி இந்து அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து வழக்கம் போல் இந்த ஆண்டு திருவிழா நடத்த கடந்த 2 நாட்களுக்கு முன் கொடியேற்றம் நடைபெற்றது.

இதனைப் அறிந்த விழுப்புரம் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கோவிலுக்கு விரைந்தனர்.

இக்கோவிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கான அறிவிப்பு நோட்டீசை ஓட்டினர்.

மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கோவில் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended