• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • வேளாண்மை தோட்டக்கலை துறை சார்பில் வளர்ச்சிப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

வேளாண்மை தோட்டக்கலை துறை சார்பில் வளர்ச்சிப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மேஷாக்

UPDATED: May 25, 2023, 8:09:48 PM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியத்தில் வேளாண்மை தோட்டக்கலை துறை சார்பில் வளர்ச்சிப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.

அவர் கொங்கரப்பட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளில் தோட்டக்கலை துறை மூலம் அவுரி பயிர் செய்யப்பட்டுள்ளதை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது முன்னோடி விவசாயி அன்பழகன் இப்பகுதியில் அதிக அளவு அவுரி பயிர் செய்யப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் இடம் விரிவாக விவரம் தெரிவித்தார்.

பயிர் செய்ய பூச்சி தாக்குதல் குறைவாக இருப்பதாகவும் சாகுபடி செலவு மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதாகவும் அதனால் அதனை பயிர் செய்வதாக அவர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அவுரி பயிர் செய்த விதைப்பு முதல் அறுவடை செய்வது ஏற்றுமதி செய்வது வரை விவரங்களை விவசாயி களிடம் கேட்டறிந்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் அவுரி பயிருக்கு மானியம், அவுரி தழை காய வைக்க உலர் களம், சேமிப்பு கிடங்கு, அவுரிபயிருக்கு காப்பீடு, அவுரி விதை உற்பத்தி செய்தல், நியாயமான விலை கிடைப்பது போன்ற வற்றை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். 

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended