• முகப்பு
  • district
  • உளுந்தூர்பேட்டை அருகே தொடர் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை அருகே தொடர் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் அந்த கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கிராம ஊராட்சியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யாமல் இருந்து வருவதாகவும் இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதனை சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தொடர் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும் அதனை சீர் செய்ய வலியுறுத்தியும் கிராம மக்கள் உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் சாலையில் பாண்டூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர் இதனால் ஏராளமான கிராம மக்கள் அந்த பகுதியில் திரண்டனர் தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வன் தலைமையில் போலீசார் பாண்டூர் கிராமத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended