• முகப்பு
  • district
  • மதுரை ஆதீனத்திற்கு கிராம மக்கள் கடும் கண்டனம். உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு !

மதுரை ஆதீனத்திற்கு கிராம மக்கள் கடும் கண்டனம். உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே உள்ள நவக்கிரகங்களில் ஒன்றாக கருதப்படும் சுக்கிரன் கோவில் இந்த திருக்கோவில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் இந்தக் கோயிலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு இதுநாள் வரை எந்த கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. மேலும் மதுரை ஆதீனம்அருணகிரிநாத ஞானசம்பந்த சன்னிதானமாக இருந்துவந்த இந்நிலையில் அவர் மரணமடைந்ததை அடுத்து புதிய சன்னிதானமாகஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்தர் புதிய சன்னிதானமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் இவர் கட்டளை சாமியாக இருந்தபோது கஞ்சனூரில் சரிவர கணக்கை முறையாக பராமரிக்காமல் பணத்தை ஊழல் செய்துவிட்டார். ஆனால் தற்போது பதவி ஏற்ற மதுரை ஆதீனம் கிராம மக்கள் மீது வீண்பழி சுமத்துகிறார். எனவே கஞ்சனூர் திருக்கோவிலை தமிழக அரசு ஆய்வு செய்து இந்த கோயிலை தமிழக அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கஞ்சனூர், கோட்டூர்,துகிலி, மணலூர் உள்ளிட்ட 4 கிராம மக்கள் கஞ்சனூர் சுக்கிரன் கோவில் முன்பு திரண்டு மதுரை ஆதீனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended