• முகப்பு
  • other
  • ஆல மர நிழலிலும், அரசமர காற்றிலும் அற்புதமாக வாழும் கிராம பொதுமக்கள் ஊர் சுற்றியும் ஆலமரம்,அரச மரம் மட்டுமே !!

ஆல மர நிழலிலும், அரசமர காற்றிலும் அற்புதமாக வாழும் கிராம பொதுமக்கள் ஊர் சுற்றியும் ஆலமரம்,அரச மரம் மட்டுமே !!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளகுறிச்சி : அப்படி எழில் மிகுந்த கிராமத்தை பற்றி தான் இந்த சிறப்பு தொகுப்பு விவரிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சு.ஒகையூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஆலமரம், அரசமரம், இச்சிலி மரம் போன்ற மரங்கள் சூழ்ந்துள்ளது என்பது சற்று ஆச்சர்யம். ஆம் அதிலும் கோடைகாலம் என்பதால் தற்போது அம்மரங்களில் கிராம பொதுமக்கள் நிழலுக்காகவும், மன அமைதிக்காகவும் ஓய்வெடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒகையூர் கிராமத்தில் ஊரின் வரவேற்பு முதற்கொண்டு,ஊரின் முடிவு வரையிலான அதாவது கோவில் வளாகங்கள்,பள்ளி வளாகங்கள்,அரசு நியாயவிலைக் கடை ,பேருந்து நிலையங்கள் மற்றும் ஆங்காங்கே கிராமங்கள் தோறும் உள்ள ஆலமரம்,அரசமரம் இருப்பதனாலேயே இக்கிராமத்திற்கு கூடுதல் சிறப்பாகும். மேலும் இலையுதிர் காலம் முடிவடைந்த தற்போது துளிர்விடும் காலமென்பதால் மரங்களில் இலைகள் விட்டு பச்சையாக காணப்படுவதால் கிராமங்கள்தோறும் பசுமையாகவே காணப்படுகிறது. மேலும் கிராமத்தின் சாலை ஓரமாக வேலிகள் அமைக்கப்பட்டு மரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மரம் வளர்ப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகளையும், ஊர் பொது மக்களும், இளைஞர்களும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தியாகதுருகம் ஒன்றியங்களில் சு.ஒகையூர் கிராமத்தில் ஆலமரம்,அரசமரம் ,இச்சலி அதிக மரங்கள் உள்ளன என்பதே மாற்றுக் கருத்து இல்லை. மேலும் ஒகையூர் கிராமம் முழுவதும் பாரம்பரிய மரங்களான ஆலமரம், அரசமரம் அதிகம் வளர்க்கப்பட்டு அதைப் பேணிகாப்பதனால் , புனித தலமாகவும் திகழ்வதால் மற்ற கிராமத்திற்கு மரம் வளர்ப்பதின் முக்கியத்துவமும், வெயில் காலத்தில் நிழலின் அருமையும் எடுத்துக்காட்டாக ஒகையூர் கிராமம் முன்னுதாரணமாக திகழ்கிறது என்பது பாராட்டுதலுக்குரியது. கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ். இன்றைய செய்திகள் கள்ளகுறிச்சி தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,kallakurichi news,kallakurichi today news live,The village people live wonderfully in the shade of the banyan tree and the peepal tree, pipal tree,pippala tree, peepul tree, tree around the village,alamaram,arasamaram

VIDEOS

RELATED NEWS

Recommended