Author: சுரேஷ்பாபு

Category: குற்றம்

22.05.2023 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த கந்தசாமி என்பவர் பொன்னேரி அடுத்த பெரியகாவனம் பகுதியில் பட்டா வழங்குவதற்காக நபர் ஒருவரிடம் ரூபாய் ஐந்தாயிரம் ரூபாயை இருசக்கர வாகனத்தில் அமர்ந்த படி லேப்டாப் நோண்டிக் கொண்டு லஞ்சம் பெரும் வீடியோ தற்போது வைரலாகி வருவது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பொன்னேரி துணை வட்டாட்சியராக பணிபுரிந்தவர் கந்தசாமி. கடந்த 22/2/2023 ஆம் தேதி அன்று பயனாளி ஒருவரிடம் பட்டா வழங்க வேண்டி ரூபாய் பெரிய காவணத்தில் கையூட்டு பெற்றுள்ளார்.

அதனை தனது செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்ட பயனாளி தனக்கு பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதுநாள் வரையில் காத்துக் கிடந்துள்ளார்.

ஆனால் கந்தசாமி பட்டா வழங்காமல் கடந்த 6/3/2023 பணி மாறுதல் பெற்று ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியமர்ந்து தற்போது அங்கு பணியாற்றி வரும் நிலையில் அவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

இச்சம்பவம் குறித்து தற்போது ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் கந்தசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது அந்தப் பணம் வேறு செலவிற்காக வாங்கியது என்றும் தன் மீது பொய் புகார் கூறி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார், மேலும் பணம் பெரும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

#thiruvallurnews , #thiruvallurnewsintamil , #thiruvallurnewslive , #thiruvallurnewstoday , #thiruvallurnewstodaytamil , #corruption #bribery #thiruvallurnewspapertoday , #இன்றையசெய்திகள்திருவள்ளூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayasithigalthiruvallurtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews , #Tginews , #news , Tamil news channel , Tamil news Flash , Tamil news live tv ,#thiruvallurtodaynews , #thiruvallurlatestnews , #thiruvallurnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0