• முகப்பு
  • district
  • நன்னிலம் அருகே கழுத்தளவு ஆற்றுநீரில் சடலத்தை தூக்கிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

நன்னிலம் அருகே கழுத்தளவு ஆற்றுநீரில் சடலத்தை தூக்கிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அன்னியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாடசாலை கிராமம் உள்ளது அந்த கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களுக்கு சுடுகாட்டிற்கு தனியாக சாலை வசதி இல்லாத காரணத்தினால் ஆற்றைக் கடந்து தான் சுடுகாட்டிற்ககு செல்லவேண்டிய சூழல் நிலவுகிறது. கோடைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாத நேரங்களில் இவர்கள் ஆற்றில் இறங்கி சடலத்தைக் கொண்டு சென்று அடக்கம் செய்வது வழக்கம்.தற்போது குறுவை சாகுபடிக்காக 75 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் தண்ணீர் முன்கூட்டியே தமிழக அரசால் திறக்கப்பட்டுள்ளது.இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது. இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் வயதானவர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் அவரை சுடுகாட்டிற்கு இறுதிச்சடங்கு செல்வதற்காக அப்பகுதி மக்கள் தூக்கி செல்கின்றனர்.வேறு வழியோ சாலையோ இல்லாத காரணத்தினால் கழுத்தளவு உள்ள ஆற்று நீரில் இறங்கி அவர்கள் அந்த சடலத்தை தூக்கிச் செல்லும்போது இரண்டு முதியவர்கள் தண்ணீரில் சிக்கியுள்ளனர் அங்கு இருந்தவர்கள் அவர்களை பத்திரமாக உடனடியாக மீட்டுள்ளனர். மேலும் மிகவும் சிரமப்பட்டு அவர்கள் ஆற்றில் அந்த முதியவரின் சடலத்தை தூக்கி செல்லும் காட்சியானது அங்கிருந்த நபர் ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனை அடுத்து பல துன்பங்கள் துயரங்களுக்கிடையே வாழும் மனிதனது இறுதி சடங்காவது அமைதியாகவும் நிம்மதியாகவும் நடைபெற வேண்டுமென்றால் இந்த அவலத்திற்கு உரிய நடவடிக்கை எடுத்து சுடு காட்டிற்கு செல்ல மாற்றுப் பாதையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்று சுடுகாட்டுக்கு வழி இல்லாமல் ஆற்றில் இறங்கி சடலத்தை எடுத்து செல்லும் அவல நிலை என்பது நன்னிலம் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்திலும் இன்றும் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended