• முகப்பு
  • political
  • உளுந்தூர்பேட்டை அருகே மூன்றாவது முறையாக நடைபெற்ற ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் , தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டை அருகே மூன்றாவது முறையாக நடைபெற்ற ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் , தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தால் பரபரப்பு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சியார்பேட்டை ஊராட்சியில் கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஊராட்சி மன்ற துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் மொத்தம் உள்ள 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் 3 பேர் ஒரு அணியாகவும் , மற்ற 3 பேர் தனி அணியாகவும் செயல்பட்டு வந்ததோடு துணைத்தலைவர் பதவிக்கு இரண்டு அணிகளும் தலா ஒருவர் போட்டியிட முடிவு செய்தனர் . அதில் கணேசன் என்பவருக்கு ஆதரவாக ஊராட்சி மன்ற தலைவர் இருந்து வந்தார் அதனால் அதிமுகவை சேர்ந்த கணேசன் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் வெற்றி பெற முடியாத நிலை இருந்து வந்த நிலையில் , தொடர்ந்து நடந்த துணைத் தலைவர் தேர்தலில் ராஜேந்திரன் மற்றும் 2 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர் . மொத்தமுள்ள 6 வார்டு உறுப்பினர்கள் 4 பேர் கலந்து கொண்டால் மட்டுமே துணைத் தலைவர் தேர்தல் நடக்கும் என்று விதிமுறை உள்ள நிலையில் , ராஜேந்திரன் ஆதரவாளர்கள் மூன்று பேர் தேர்தலில் கலந்து கொள்ளாததால், அக்டோபர் மாதம் நடைபெற்ற துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தலும் அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று 3-வது முறையாக துணைத் தலைவர் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , துணைத்தலைவர் பதவிக்கு கணேசன் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் வழக்கம் போல் ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் , கூட்டத்திற்கான போதிய கோரம் இல்லாத காரணத்தினால் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதனால் அந்த கிராமத்தில் பதட்டமான சூழல் உருவானதை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended