வேலூர் சத்துவாச்சாரி வ.ஊ. சி . நகரில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வாசுதேவன்

UPDATED: May 16, 2023, 11:27:01 AM

வேலூர் சத்துவாச்சாரி வ.ஊ. சி. நகரில் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பற்றிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ. ஊ. சி. நகர் பகுதியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் எம். டி. இருதயராஜ் அறிவுறுத்தலின்படி,

வ.ஊ.சி. நகர் மாமன்ற உறுப்பினர் சதீஷ், வார்டு முக்கியஸ்தர்கள், எஸ். ஜே. எச். ஆர். காவல் உதவி ஆய்வாளர் ஜே. சிவக்குமார், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் சத்துவாச்சாரி காவல் உதவி ஆய்வாளர் நாராயணன் ஆகியோர் வ. ஊ. சி. நகர் பொதுமக்களிடம் சமூக நீதி, சமத்துவம், மனிதநேயம், மனித உரிமைகள், எஸ்.சி ./எஸ்.டி., திட்டங்களை பற்றியும்,

இணையதள குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இலவச உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பற்றிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களும், பெண்களும் மகிழ்ந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையும் காவல்துறையினர் தீர்த்து வைத்தனர். இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended