Author: Vijaya lalshmi

Category:

வேலூர் வெளிநாட்டிலிருந்து 6 நாட்களில் வந்த 71 பேரை கண்டறியும் பணிகள் மும்முரம் வெளிமாநிலத்தவர்கள் இனி சி.எம்.சி மருத்துவமனைக்கு வரும் போது கொரோனா இல்லை என்ற சான்றுடன் வரவேண்டும் இல்லையென்றால் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபடும் - ஓமைக்ரான் வைரசை சமாளிக்க 50 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேட்டி. வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சியில் உள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார் அவருடன் மாநகராட்சி நகர் நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் துணை சுகாதார இயக்குநர் பானுமதி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர் . பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இன்றைக்கு கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 2600 பேரில் ஒன்பது பேருக்கு மட்டும் கொரோனா ஏற்பட்டுள்ளது மேலும் மற்ற வைரசுகள் ஓமைக்கரான் வைரஸ் குறித்து வெளிநாட்டிலிருந்து வருபவர்களின்பட்டியல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது . அவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்துவோம் வெளிநாட்டிலிருந்து 71 பேர் வந்துள்ளனர் அவர்களில் 42 பேர் கண்டறிந்து மீதமுள்ள 12 பேர் வேறு மாவட்டம் மீதமுள்ளவர்களையும் கண்டறிவோம் இவர்கள் நவம்பர் 30 ஆம் தேதி முதல் வேலூர் வந்துள்ளனர் மருத்துவர்களும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் . மாநகராட்சி மண்டலங்களில் ஆய்வு செய்து வெளிமாநிலங்களிலிருந்து சிகிச்சை பெற லாட்ஜகளில் தங்க உள்ளே வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் முடிவு வைத்திருந்தால் மட்டுமே அவர்களை அனுமதிக்க வேண்டும் மேலும் நெகடிவ் வந்தால் அவர்கள் வெளியில் செல்லாமல் இல்லையென்றால் அவர்களை மாற்று இடங்களுக்கு அனுப்புகிறோம் 50 படுக்கைகள் கூடுதலாக உள்ளது மேலும் வசதிகளை அதிகரிக்கவுள்ளோம் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வீட்டிலேயே ஒருவாரம் இருக்க வேண்டும் . பெங்களூரிலிருந்து வருபவர்கள் ஓட்டல்களுக்கு செல்வதை தடுக்க அதிக கூட்டம் கூட்ட கூடாது என ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தவுள்ளோம் . வேலூர் மாவட்டம் பின் தங்கிய நிலையிலிருந்து 73 சதவிகிதம் முதல் தவணையும் இரண்டாவது தவணை 40 சதவிகிதம் தடுப்பூசி போட்டுள்ளோம் மேலும் ஒரு சிறப்பு முகாம் நடத்தி 76 சதவிகிதத்தை அடைவோம் மத்திய அரசு தொற்று அதிகமாக இருப்பதாக கூறுவது சி.எம்.சி மருத்துவமனையில் வெளிமாநிலத்திலிருந்து சிகிச்சைக்கு வந்தவர்க்ளையும் வேலூர் மாவட்ட கணக்கில் சேர்த்து லாட்ஜ் முகவரியை பதிவிட்டு கூறியதால் நோய் அதிகமானதாக தவறாக கணக்கு காட்டிவிட்டனர் . அதனால் நாம் அச்சப்பட தேவையில்லை மேலும் தனியார் மருத்துவமனை சி.எம்.சி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் வெளிமாநில நோயாளிகளுக்கு அவர்கள் ஆதார் அட்டை முகவரியை வைத்து பதிவு செய்ய வேண்டும் கொரோனா தடுப்பூசி 2. 25 லட்சம் டோஸ்கள் கையிருப்பில் உள்ளது தொடர்ந்து தடுப்பூசி போடுவதை திருப்திகரமாக செய்து வருகின்றனர் . இன்னும் தடுப்பூசி செலுத்திகொள்ள மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் . சி.எம்.சி சாலையில் சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்கபடுவதில்லை இதனை தடுக்க ரோட்டோரம் உள்ள உணவகங்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கூட்டம் வைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவோம் என்றுகூறினார் பேட்டி:குமாரவேல் பாண்டியன் (வேலூர் மாவட்ட ஆட்சியர்)

Tags:

Comments & Conversations - 0