• முகப்பு
  • tamilnadu
  • சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் தொடரும் வாகன விபத்துக்கள் - அரசுக்கு காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் தொடரும் வாகன விபத்துக்கள் - அரசுக்கு காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் தொடரும் சாலை விபத்துக்கள் - கால்நடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகள் சுற்றி திறிந்து வருகின்றன. சாலைகளில் சுற்றி திரியும் கால் நடைகளால் தமிழகத்தில் உயிர் பலி எண்ணிக்கை தொடர்ந்த வண்ணமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கால் நடைகளால் அதிகமான சாலை விபத்துக்கள் நடை பெற்று வருகின்றன. கால்நடைகளால் வாகன ஓட்டிகள் சாலை விபத்துகுள்ளாகி கை. கால் முறிந்து படுகாயம் அடைந்தும் பலரும் உயிரிழந்தும் உள்ளனர் . மேலும் கால் நடைகளின் உரிமையாளர்கள் அவர்களது சொந்த இடங்களில் வைத்து முறையாக கால் நடைகளை பராமரிக்காமல் சாலைகளில் விடுவதுனால் தான் வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளாகி படுகாயங்கள் மற்றும் உயிரிழந்து வருகின்றனர் . மேலும் இது போன்ற கொர சம்பவத்திற்கு கால் நடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊராட்சி , பேரூராட்சி , நகராட்சி - அரசு அதிகாரிகளின் மேத்தன போக்கின் காரணமாகவே தொடர்ந்து இது போன்ற சாலை விபத்துகளில் பலரும் சிக்கி வருகின்றனர். எனவே. சாலைகளில் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளாகி படுகாயங்கள் - உயிரிழப்பு போன்று ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் சம்பந்த பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியாக அபதாரமும் மற்றும் வழக்கும் பதிவு செய்ய வேண்டும் மேலும் கால்நடைகளால் ஏற்படும் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended