• முகப்பு
  • மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை....

மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை....

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தஞ்சை : தென்னக பண்பாட்டு மையத்தில் 450 கலைஞர்கள் பங்கேற்கும் தேசிய நாட்டுப்புறக் கலை விழா கோலாகலமாக தொடங்கியதுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஜப்பான், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 குழுக்கள் பங்கேற்றுள்ளார்கள். முதல் நாளில் கேரளாவின் சிங்காரி மேளம் நடனத்துடன் விழா தொடங்கியது. மயிலாடுதுறை : சீர்காழி அருகே பழையாறில் துறைமுகத்தின் மீன் வளர்ச்சி கழக விற்பனை நிலையத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.15 உயர்த்தியதற்கு கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைப்படகு, பைபர் படகு, நாட்டுப்படகு என சுமார் 1000 படகுகளை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி : துலுக்கபட்டி - கோவில்பட்டி இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது ரெயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நெல்லை : சிவசைலம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள் விற்பனை செய்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடி : எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியில், சிலர் ரேஷன் அரிசியை வேனில் ஏற்றி கொண்டு இருந்தது தெரிய வந்தது. 20 டன் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் : ஜெயங்கொண்டம் அருகே தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்த முயன்றது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு சென்ற தாசில்தாரை கிராம மக்கள் தாக்கி அவரது வாகனத்தையும் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் : கும்பகோணத்தில் உள்ள நவக்கிரக தலங்களில் ராகு பகவான் தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சியையொட்டி லட்சார்ச்சனை விழா துவங்கியது. புதுக்கோட்டை : மாங்கனாம்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று திமிரும் காளைகளின் திமிலை பிடித்து அடக்கி வருகின்றனர். மாங்கனாம்பட்டி வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் போட்டியை துவக்கி வைத்தார். கோவை நீர்வரத்து இல்லாததால் ஆழியார் அணை நீர்மட்டம் 75 அடியாக சரிந்தது ,விவசாயிகள் வேதனை

VIDEOS

RELATED NEWS

Recommended